Sunday, July 29, 2018

எங்கள் ஆடை சற்று விலகியவுடன் மறைவான பகுதி தெரிகிறதா

தாலி கட்டிய அன்றோ அல்லது மனதால் இணைந்த அந்த நிமிடங்களிலோ அப்படி ஒரு ஆத்மார்த்தமான அரவணைப்பு
ஆடைக்கலைப்பு என சுகமாக அரங்கேறும் பல நிகழ்வுகள்…

உனக்கு எப்படியோ தெரியவில்லை எனக்கு மிகுந்த வலி இருப்பினும் சுகமாக நான் அனுபவித்தேன்…

அன்றிலிருந்து நிகழும் நிகழ்வுகளை நான் அடுக்குகின்றேன்  பாருங்கள்…
அதிகாலை எழுந்து குளித்துச் சமைத்து முத்தத்தோடு உனக்கு
உணவைக் கொடுத்து அனுப்பிய பின்பு துணி துவைத்து, வீடு சுத்தம் செய்து, ஆடைகள் சமன் செய்து அழகாக மடித்து வைத்து உன் அம்மாவுக்கு இல்லை மன்னிக்கவும் நம் அம்மாவுக்கு பணிவிடை செய்து மகனையும் மகளையும் பாடசாலை அனுப்பி வைத்து மறுபடியும் சமைத்து நமது பிள்ளைகளை பாசத்தோடும் கண்டிப்போடும் கண்காணித்து
ஓடிக் கொண்டே இருக்கிறேன் நான்…

இன்னும் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்… முதல் முறை கூடலின் போது ஒரு வலி உணர்ந்தேனே அதை விடவும் ரணம் என்றார்கள் மகப்பேறு பயந்து நடுங்கி நகர்ந்துக் கொண்டிருந்தேன் பெருமையோடு நம் பிள்ளையை வயிற்றில் சுமந்து பெறுமாதம் வந்தவுடன் சொன்னார்கள்
குழந்தை வலம் மாறியதால் வயிற்றை அறுத்து தான் எடுக்க வேண்டும் என்று…
இப்பொழுது சொல்கிறேன் கேளுங்கள்…

எங்கள் ஆடை சற்று விலகியவுடன் எட்டி எட்டிப் பார்ப்பீர்களே மறைவான பகுதி தெரிகிறதா என்று முழுதாக உரித்து சுவையாக சுவைத்து சூட்டைத் தணிப்பீர்களே
அப்போதெல்லாம் காம விருந்தாக தெரிந்தவளை இப்போது பாருங்கள்… வெட்டுப்பட்டு மாமிச குவியலாக இருக்கிறாள்....
நன்றாகப் பாருங்கள்…
விழிகளை விழித்துப் பாருங்கள்…
நீங்கள் அடையத் துடிக்கும்
மறைவான பகுதிக்கு மேல்
சதையை வெட்டி தைத்துள்ளார்களே இதை நன்றாகப் பாருங்கள்…
என்னை வெட்டியேனும் என் குழந்தையைப் பத்திரமாக வெளியில் எடுங்கள் என்று ஒரு பெண் சொல்கிறாளே உங்களை வெட்ட நீங்கள் சம்மதிப்பீர்களா ?
இச்சைக் கொண்டு நோக்கும் ஆண்கள் இதை நன்றாகப் பார்த்து
பிறகு ஒரு பெண்ணை நோக்குங்கள் கண்டிப்பாக காமம் கலக்காது உங்கள் கண்களில் தாய்மையின் மகத்துவம் மட்டுமே தென்படும் என்பேன் நான்…
கூடலின் வலி, மகப்பேறின் வலி வயிற்றை வெட்டித் தைத்ததன் வலி
இவையெல்லாம் மறந்து போகும்
இந்த அழகான மழலையின் முகம் பார்க்கையில்…
ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு அதிசயம் தான்…
பெண்மை(தாய்மை)யைப் போற்றுவோம் √

Tuesday, July 24, 2018

ஐந்து நிமிடங்களில் 500 ரூபாய் சம்பாதிக்கலாம்

மனிதன் வர வர உழைப்பதற்கு அஞ்சுகிறான். ஐந்து நிமிடங்களில் 500 ரூபாய் சம்பாதிக்கலாம்,  பகுதி நேரத்தில் 10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம், போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து அவர்களின் வார்த்தைகளை நம்பி தங்களின் உண்மையான விவரங்களை அதாவது தொலைபேசி எண்கள், தங்களின் வங்கி கணக்கு எண்கள் மற்றும் தங்களின் முழு விவரங்களையும் அவர்களிடம் கூறி விடுகிறார்கள் .இது ஒரு சாதாரண தகவல் தானே என்று அலட்சியமாக இருந்தனர், நீங்கள் கூறும் வங்கி எண்களை வைத்து அது எந்த வங்கி என்பதை அவர்கள் கண்டறிந்து உங்களின் செல்லிடை பேசியில் தொடர்பு கொண்டு நாங்கள் குறிப்பிட்ட வங்கியில் இருந்து பேசுகிறேன் என்று கூறி, உங்களின் வங்கி சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் ரகசிய குறியீட்டு எண்களையும் மற்றும் ஏடிஎம் அட்டையின் பின்புறத்தில் உள்ள எண்களையும் தங்களின் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன, இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி உண்மையான நிறுவனங்களும் மற்றும் ஆன்லைன் வர்த்தகமும் சிறு வியாபாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறது எனவே பொதுமக்கள் விழிப்புடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம், தங்களின் முழு விபரங்களை தேவையில்லாமல் பதிவு பதிவிடுவதை தவிர்க்கவும், தீவிர விசாரணைக்கு பிறகு சரியான முடிவுகளை எடுக்க வேண்டும், இவ்வாறு செயல்படும் பொழுது உங்களுடைய பணத்தை நீங்கள் இழக்காமல் இருக்க வழிவகை செய்கிறது

ஒரு புகைப்படம் ஐந்து நாளாக மனதை உருக்கியது

ஒரு புகைப்படம் ஐந்து நாளாக
என் மனதை உருக்கியது
அதற்கான வரிகள்
என்னிடம் கச்சிதமாக பொருந்த வில்லை
அதனால் ஐந்து நாள்
காத்திருந்து இந்த கவிதையை
எழுதி முடித்தேன்
எழுதும் போது
என் பேனாவும் எழுத மருத்தது
அவ்வளவு ரணம்
வலிக்கிது
பாபா
ஒன்னுமில்ல
மாமா
வலிக்கிது
இந்தா
 சாக்லேட்
அண்ணா
வலிக்கிது
ஒன்னும்
 செய்யாது
தாத்தா
வலிக்குது
எல்லாம்
வாங்கி தாறேன்
என்ன விடுங்க
வலிக்குது
எங்கோ ஓரிடத்தில்
ஏதோ ஓர் மூலையில்
வாயில் வார்த்தைகள் கூட நுழையாத
ஒரு சின்ன பட்டாம் பூச்சி ஒன்று
வலிக்கிது மாமா என்கிறாள்
சுடலை விழுங்கும்
சுங்கம் சுடு சுடுகாட்டு பேய்களே
அவள் வலிக்கிது மாமா என்று
சொல்லும் போது
உனக்கு
கேட்கவில்லையா
புரியவில்லையா
தெரியவில்லையா
ஆறாம் அறிவை உணரவில்லையா நீ
என்
மனம் வலிக்கிறதே
அந்த குழந்தை
எப்படி துடித்திருப்பாள் என்று
எங்கோ ஓரிடத்தில்
ஏதோ ஓர் மூலையில்
கள்ளம் கபடமற்று சிரித்த பூவொன்று
வலிக்கிது அண்ணா என்றாள்
கருநாக விசம்
கருத்த நொடிகளில்
கருமம் செய்யும் கனத்த காட்டேரிகளே
அவள் வலிக்கிது அண்ணா என்று
சொல்லும் போது
உனக்கு
இதயம் வலிக்கவில்லையா
உடம்பு கூசவில்லையா
உருப்பு ஒலியவில்லையா
ஆறாம் அறிவை உணரவில்லையா நீ
எங்கோ ஓரிடத்தில்
ஏதோ ஓர் மூலையில்
சிறகை விரித்து பறந்து
கும்மாளம் போட்ட சின்ன பறவையொன்று
வலிக்கிது தாத்தா என்றால்
உடல் சுருங்கி
எமன் அழைக்கும்
தேகம் கொண்ட தேளே
பறந்த சிறகை உடைத்து
நீ எமனாகி எத்தனை
ஏப்பம் விடும் அளவில்
உடலுக்கு உணவு கொடுக்க
அவள் வலிக்கிது தாத்தா என்று
சொல்லும் போது
உனக்கு
உன் பிள்ளை நினைவுக்கு
வரவில்லையா
உன் பேத்தி நினைவுக்கு
வரவில்லையா
நீ ஆறாம் அறிவை உணரவில்லையா
எங்கோ ஓரிடத்தில்
ஏதோ ஓர் மூலையில்
கடவுளோடும்
கனவுகளோடும்
பேசிக் கொண்டிருக்கும்
பிஞ்சி குழந்தையொன்று
வலிக்கிது விடுங்க என்று செல்கிறாள்
கூட்டமாக கூடி
கொஞ்சம் கொஞ்சமாக
ரத்தம் குடிக்கும் நரக புழு போல்
கூட்டமாக கூடி
நரக வதம் செய்யும் போது
அவள் வலிக்கிது விடுங்க என்று
சொல்லும் போது
உங்களுக்கு
தேகம் சுடவில்லையா
காமம் தடுக்கவில்லையா
கடவுளும் இறங்கவில்லையா
வார்த்தைகள் நுழையாத அவளிடத்தில்
வலிக்கிது
என்ற வார்த்தை கூட
உர்ந்ததால் தான் சொல்லுகிறாள்
பாதகர்களே
ஏன் இந்த வெறி
ஏன் இந்த மோகம்
ஏன் இந்த செயல்
அம்மா
வயிற்றில் பிறந்தவர்கள் தானே நீங்களும்
அக்காவோடு
வளந்தவர்கள் தானே நீங்களும்
தங்கையோடு
இருந்தவர்கள் தானே நீங்களும்
எப்படி
உங்களால்
இப்படி இரு அரக்கம் செய்ய
மனம் வருகிறது
ஐயோ..
என்
மிகப் பெரிய கேள்வி ஒன்றை கேட்கிறேன்
தெய்வங்கள் உண்டா?
இருந்திருந்தால்
ஏதோ ஓரிடத்தில்
ஏதோ ஓர் மூலையில்
ஒரு சிறுமியை காப்பாற்றி இருக்கலாமே?
அந்த குழந்தை
வலிக்கிது என்று சொல்லும் போது
அவள் எப்படி துடித்திருப்பாள் என்று
நினைக்கும் போது
நான் நொந்து வேதனையில்
கண்ணீர் சிந்துகிறேன்
கண்டிப்பாக நீங்களும்
அவள் வேதனையை நினைத்து
கண்ணீர் வடித்திருப்பீர்கள்
எப்போது
மனிதம் மனிதமாகும்

மகிழ்வில் நான்

சமூகக் கட்டுப்பாடுகள்
எனச் சில
சதிராட்டங்களும் இங்கு அவலமே....!
இணையம் கூடாது..!
முகநூல் கூடாது..!
கிராமத்தில் இவை ஆணுரிமைகள்..!
இரண்டாண்டு முன்புவரை
என் இல்லத்திலும்
என் கிராமத்திலும்இதுவே தொடர்கதை
ஆசிரியர் பயிற்சி
ஒன்றிற்காய் இணைந்தேன்
இணையத்தில் ‌எதுவும் தெரியாது....!
பொழுது போக்காய்
முகநூல் நுழைவு....!
காலை வணக்கம் கவிதையாய் மலர..!
பள்ளி விழாக்களில்
பரிணமித்த எனது கவிதைகள்
வெற்றுக் காகிதங்களாய் வீசி எறிந்தே
விழா அரங்கேற்றம்
முகநூல் அரங்கேற்றம்
இத்தனை திறமைகளா என்னில்....!
தூக்கி எறியப்பட்டன
முட்டாள் தனமான
சமூகக் கட்டுப்பாடுகள் என்னால்...!
கவிதைப் பதிவுகளின்
சில நாட்களிலேயே
பௌர்ணமி நிலவாய் பிரகாசம்....!
வந்து கொண்டிருக்கின்றன
வகை வகையாய் வரவேற்பு..!
பழம் நழுவி பாலில் விழுந்தது போல்
மகிழ்வில் நான்...!

ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும், அவன் மனைவின் விருப்பமும் நிறைவேறின

ஒரு ஊரில் ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்குக் கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாகக் குழந்தையும் இல்லை. ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக் கிடந்த பெரிய மீனொன்று அவனைப் பார்த்துக் கெஞ்சியது:
மீனவனே, நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன். ஆழ்கடலில் வசிக்கும் நான், ஒரு பெரிய அலையில் சிக்கி இந்தக் கரைப் பகுதிக்கு வந்துவிட்டேன். இப்போது நீந்த முடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே. என்னை பத்திரமாக ஆழ்கடலுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்.''
மீனவன் அந்த மீனைத் தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகைச் செலுத்திக் கொண்டுபோய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு, என்ன வரம் கேட்பது என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. எனவே அவன் சொன்னான்:
மீன்களின் ராஜாவே, நீ சொன்னபடி நான் செய்துவிட்டேன். ஆனால், என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்குச் சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு நாளை வந்து கேட்கிறேன்.''
மீனும், ""நீ ஒரே ஒரு வரம்தான் கேட்க வேண்டும்''என்று நினைவுபடுத்தி நன்றி கூறிச் சென்றது. மீனவன் வீட்டுக்குச் சென்றான். வீட்டில் பெற்றோரிடமும், மனைவியிடமும் நடந்ததைக் கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது என்று ஆலோசித்தான்.
அவனது தந்தை கூறினார்:
மகனே, நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டைக் குடிசையில்தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்ல வீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேளேன்...''
அடுத்ததாக அவனது அம்மா சொன்னார்கள்:
மகனே, எனக்குக் கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்கள் பார்வை பெற வேண்டும் என்று அந்த மீனிடம் கேள்...''
கடைசியாக மனைவி கேட்டாள்:
நமக்குத் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நமக்கு ஒரு குழந்தை இல்லை. எனவே, அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள்.''
மறுநாள், அந்த மீனவன் கடலுக்குச் சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம்தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும், அவன் மனைவின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்?
விடை: என் மகன் கீழே விளையாடிக் கொண்டிருப்பதை, எங்கள் வீட்டு மாடியிலிருந்து என் பெற்றோர் பார்த்து மகிழ வேண்டும்'' என்பதுதான் அவன் கேட்ட வரம்.
நீதி: உங்கள் உடன் வாழ்பவர்களின் மீது உங்களுக்கு ஆழமான அன்பும் அக்கறையும் பாசமும் இருப்பின்.. அந்த எண்ணமானது உங்களை அறியாமலேயே உங்கள் புத்திகூர்மையையும் முடிவொடுக்கும் திறமையையும் இயல்பாகவே வெளிப்படும்.

ஒரு நாய்

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..
கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...
கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..
. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..
அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...
பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...
கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..
அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..
ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..
கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்..
இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...
கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...
நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...
கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...
நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....
கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???
அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு....
நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது

Thursday, July 19, 2018

பாலியல் வன்கொடுமை

பதினோரு வயது பெண் குழந்தை 6 மாதங்களுக்கும் மேலாக பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்டுள்ளதை ஒரு தாயால் சரியாக கணிக்க முடியவில்லை என்றால் இன்றைய குடும்ப சூழல் நடைமுறைகளில் ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள் தான் முக்கிய காரணமாக இருக்க முடியும். குழந்தையின் தாய், தன் குழந்தையோடு தனிப்பட்ட அக்கறையோடும், அரவனைப்போடும் பேசியிருந்தாலோ, உன்னிப்பாக கவனித்திருந்தாலோ கூட ஆரம்பத்திலேயே தடுத்திருக்க முடியும்.
பொதுமக்களே! இருபாலர்களையும் வக்கிரங்களின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் இன்றை குடும்ப தொலைக்காட்சி தொடர்களை தயவுசெய்து புறக்கணியுங்கள். தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கிப்போவது என்பது, போதை வஸ்துக்களை விட கொடியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்குபதிலாக
உங்கள் வீட்டில் உள்ளவர்களோடும்,  உறவினர்களோடும், அக்கம்பக்கத்தினர்களோடும் நட்பாக பேசுங்கள்.
இந்த நேரத்தில் அரசிடமும் கோரிக்கை வைக்கலாம் என்று எண்ணுகிறேன்.
3 மணி நேரமாக பார்க்கப்படும் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் அவசியமாகும்போது, பொதுமக்களால் 24 மணி நேரமும் நேரடியாக வீட்டிலிருந்து பார்க்கப்படும் தொலைக்காட்சி தொடருக்கு தணிக்கை சான்றிதழ் அவசியம் இல்லையா? தணிக்கை சான்றிதழ் கொடுக்க முயற்சிகலாமே! அப்படி செய்தால் கண்டிப்பாக தொலைக்காட்சி தொடர்கள் ஒரு வரைமுறைக்கு வரலாம். தொலைக்காட்சி தொடர்களுக்கு தேசிய தணிக்கை வாரியம் மூலம் கண்டிப்பாக கட்டுபாடுகளை விதிக்க வேண்டும். அப்படி முயற்சித்தால் மட்டுமே எதிர்காலத்திலாவது நம் குடும்ப கட்டமைப்பை காப்பாற்ற முடியும். வக்கிரகாரர்களும் குறைவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும்

Wednesday, July 18, 2018

70 ஆண்டுகளாக தொட முடியாத சாதனையை

பல அவ மானங்கள், வறுமை, புறகணிப்பு, நிற பிரிவினை, வாய்ப்பு மறுப்பு இத்தனை சுமைகளை சுமந்து ஓடினாயே வைரமே .70 ஆண்டுகளாக தொட முடியாத சாதனையை நிகழ்த்தியது உனது கால்கள் தங்க மங்கைக்கு .நன்றி உணர்வோடு உங்கள் உழைப்பிற்கும், பயிற்ச்சிக்கும் தலை வணங்குகிறோம்.
ஹீமாதாஸ்.. நமக்கு கிடைத்த வைரம்.வறுமையிலும் சாதித்த வைரம்

ஒரு பெண் டீச்சரைப் பார்த்து

பள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் பார்த்து ’பால்பண்ணை’ என்று சகமாணவர்கள் கூப்பிடுவார்கள்.
அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக் காரணம். பெரிய மார்பில் நிறைய பாலிருக்கும். ’நிறைய பால்’ பண்ணையில்தான் இருக்கும். அத்தகைய பெரிய மார்பகங்களை கொண்டுள்ளதால் அவரைப் ’பால்பண்ணை’ என்று அழைப்பார்கள்.
அப்பெயரை நான் உச்சரிக்கவில்லையே தவிர பையன்கள் அப்படிச் சொல்லும் போது கலகலவெனச் சிரித்திருக்கிறேன்.
அதற்கும் முன் சிறுவயதில் ’சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தில் லட்சுமி நடித்திருக்கும் கேரக்டருக்கு பால்கட்டி கொண்டது என்று துன்பப்படுவதாக ஒரு காட்சி வரும்.
ஒரு விநாடி இப்படின்னா என்ன? என்று தோன்றி பின் மறந்த காட்சி அது.
பொதுவாக பெண்ணின் மார்பு என்பது ஆணுக்கு உச்சமான இன்பத்தைக் கொடுக்கும் விசயம். பார்க்கும் பெண்களின் மார்புகளில் எல்லாம் தன் விழிகளை பதிக்காமல் இருக்க அவனால் முடியவில்லை.
ஆனால் அதன் பின்னால் பெண்கள் அடையும் துன்பத்தைப் பற்றி எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
மாதவிலக்கு, மென்ஸஸ் போன்ற விஷ்யங்கள் பற்றி கூட கொஞ்சம் விழிப்புணர்ச்சி  வந்தாற்போல இருக்கிறது.ஆனால் இந்த மார்பினால் வரும் துன்பத்தைப் பற்றி மிகக் குறைந்த விழிப்பே இருக்கிறது.
சமீபத்தில் அமரந்தா எழுதிய ’பால்கட்டு’ என்றொரு கதையைப் படித்த பிறகுதான் எனக்கு இதன் வலி புரிந்தது.
கதைச் சுருக்கம் வருமாறு.
மத்திய தர வர்க்கத்துப் பெண்ணுக்கு,வேலைக்கு போயே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் பெண்ணுக்கு ‘பால்கட்டுதல்’ என்றப் பிரச்சனை இருக்கிறது.
மார்பகங்களில் பால் அதிகமாகக் கட்டிக்கொண்டு வலியைக் கொடுப்பதுதான் இதன் அம்சம்.
மிக அதிகமாக கட்டிக்கொள்ள டாக்டரிடம் போகிறாள்.நர்ஸ் பம்ப் வைத்து பாலை எடுக்க முயற்சி செய்கிறார். வலியால் துடிக்கிறாள் இவள்.
இவள் வலியால் துடிப்பதைப் பார்த்த நர்ஸ் ‘யார்கிட்டயும் சொல்லாதம்மா” என்று தன் வாயால் மார்பில் வாயைவைத்து பாலை உறிஞ்சி துப்புகிறார்.
பின் பெண்ணின் முலைகளை ஆராய்ந்து, அதில் புண் இருப்பதாகவும், அதனால் பால் சரிவர வெளிவராமல் கட்டிக் கொள்வதாகவும் சொல்லி, அதற்கு ஒரு க்ரீம் கொடுக்கிறார்.
அந்த க்ரீமைத் தடவ வேண்டும். பின் குழந்தைக்குப் பாலைக் கொடுக்கும் முன் அதை சுத்தம் செய்ய வேண்டும். பின் மறுபடியும் தடவ வேண்டும் என்று நரக வாழ்க்கையை வாழ வேண்டியதாயிருக்கிறது.
காலை அலுவலகத்துக்கு வந்துவிட்டு மதியம் குழந்தைக்கு பால் கொடுக்கச் செல்வதற்குள் அது மார்பில் கட்டிக் கொண்டு கெட்டுப் போய் விடுகின்றது.
இவளுக்கு குழந்தை பால் குடித்தால் பாரம் குறையும் என்றிருக்கும் போது, குழந்தையோ கெட்டுப் போன பாலைக் குடிக்காமல் அழுகிறது.
மறுநாளில் இருந்து அலுவலகத்தின் பாத்ரூம் சென்று அவ்வப்போது மார்பை பிதுக்கி அவ்வப்போது பாலை எடுக்கிறாள்.
இப்படியாக பால்கட்டுதலால் அவள் படும் கஷ்டத்தை ஆசிரியர் கதை நெடுகச் சொல்கிறார்.
ஒருநாள் மாலை வீடு செல்லும் போது கதவு திறந்திருக்கிறது. வழக்கமாக இரவு லேட்டாக வரும் கணவன் அன்று சிக்கிரமே வந்திருக்கிறான். அதைப் பார்த்து மகிழ்ச்சி.அவனிடம் காப்பிக் குடிக்க வேண்டும் என்று கேட்க நினைக்கிறாள்.
ஆனால் மார்பு பாரம் தாங்க முடியாமல் குழந்தையை எடுத்து வராண்டாவிலேயே பால் கொடுக்கிறாள். குழந்தைக் குடிக்க ஆசுவாசப்படுகிறாள்.
ஆனால் கணவனோ உள்ளே போ உள்ளேப் போ போ என்று விரட்டுகிறான். இவள் வேறு வழியில்லாமல் உள்ளே வருகிறாள்.
“வாசல்ல இருந்துதான் இதெல்லாம் செய்வியோ’ என்று கணவன் அவள் முகத்துக்கு நேரே கையை நீட்டி கடுத்து வருகிறான்.
அவள் தலை கிறுகிறுத்துப் போகிறது.
இப்படியாகக் கதை முடிகிறது.
இதைப் படித்த பிறகுதான் பால்கட்டுதல் என்பதில் இவ்வளவு பிரச்சனையா என்று எனக்குத் தெரிந்தது. மனவியிடம் கேட்டேன்.
“ஆமா அது எவ்வளவு பெரிய கொடுமை” என்று நிறையச் சொன்னார். நான் அவளிடம் கேட்டேன் “இது எனக்குத் தெரியாதே” என்றேன்.
“இதெல்லாம் சொல்லிட்டா இருப்பாங்க” என்ற பதில் கிடைத்தது.
அம்மாவுக்கு போன் போட்டுக் கேட்டேன்.
அம்மா இந்தக் கதையை ஆமோதித்து, பால் கட்டுதல் என்பது சில பெண்களுக்கு கொடுமையான விசயம் என்று விளக்கினார்.
நான் அம்மாவிடம் கேட்டேன் “ஏம்மா இத்தன வருஷம் உங்க கிட்ட ஃப்ரெண்டா பேசியிருக்கேன். இந்த விஷயத்த எனக்கு சொல்லவே இல்லை” என்றேன்.
யாருமே எங்கேயுமே இதுமாதிரியெல்லாம் பிரச்சனை இருக்கிறது என்று சொல்லாமல் இருந்தால் ஆணுக்கு எப்படித் தெரியும்.
அப்படி ஆணுக்குப் பெண்ணின் வலிதெரிவது இப்போதைய வன்புணர்வு கலாச்சாரத்தில் முக்கிய தேவையாகும்.
என்னைக் கேட்டால் பிளஸ் டூ தமிழ் சிறுகதைகளில் ஒன்றாக அமரந்தாவில் “பால் கட்டு” சிறுகதையை வைக்க வேண்டும் என்பேன்.
ஒருவேளை இக்கதையைப் படித்தால்
“பால் பண்ணை, இளநீ, காய், முலை, முயல் குட்டி” என்றெல்லாம் மார்பகங்களை பேசுவதை கொஞ்சம் ஆண்களாவது தவிர்ப்பார்கள்.
அந்த கொஞ்ச ஆண்கள் பிற்காலத்தில் நிறைய ஆண்களாக ஆகலாம்.
பண்பட்ட சமூகத்தை அடைவதுதான் நம் நோக்கம் என்றால் இது போன்ற சிறுகதைகள் நிறைய வரவேண்டும்.
விவாதிக்கப்பட வேண்டும்.

நெகிழ்சி சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவன் அருண்பாண்டியன். கூலி தொழிலாளியின் மகனான அருண்பாண்டியன் குண்றாண்டார்கோயில் ஒன்றியம், மின்னாத்தூர் கிராமத்திலிருந்து தினமும் பள்ளி வந்து செல்கிறான். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல பேருந்து நிலையம் சென்ற மாணவன் அருண்பாண்டியன் சக நண்பர்களுடன் சேர்ந்து பானிபூரி சாப்பிட்டுள்ளான். அப்போது சாப்பிடும் போதே அப்படியே மூச்சடைத்து மயங்கி சரிந்தான்.
இதையடுத்து, அருண்பாண்டியனை சக மாணவர்கள் கந்தர்வகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பணி மருத்துவர், நாடித்துடிப்பு மிகக்குறைவாக உள்ளதால், தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லவேண்டும் எனக்கூறி 108 ஆம்புலன்சையும் வரவைத்து பிராணவாயு சிலிண்டர் உதவியுடன் அனுப்பிவைத்துள்ளனர். ஆம்புலன்ஸில் இருந்த செவிலியர் மாணவனின் மூச்சுத் திணறலை குறைக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்க 15 நிமிடத்தில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் நிறுத்தினார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர். தொடர்ந்து மாணவனை கூட வந்த சக மாணவர்களுடன் ஆம்புலன்ஸ் நர்ஸ் வேகமாக சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தார். அங்கிருந்த மருத்துவர்கள் முதல்கட்ட சோதனை செய்து நாடித்துடிப்பு ரொம்ப குறைந்துவிட்டது. பிராணவாயுவை எடுத்தால் எதுவும் நடக்கலாம் என்று சொல்லிவிட சக மாணவர்கள் கதறினார்கள்.
கூலி வேலைக்குச் சென்ற அருண்பாண்டியனின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து சேர்ந்தனர். அப்போது, மருத்துவமைனையில் இருந்து வெளியில் கொண்டு போறதா இருந்தாலும் கொண்டு போங்க என்று மருத்துவமனையில்  சிலர் சொல்ல கதறிய பெற்றோர் வீட்டின் அருகே இருக்கும் கொஞ்ச நிலத்தை விற்க அவசரமாக பக்கத்து இடத்துக்காரரை பணத்துடன் அழைத்தும் விட்டனர். அதே நேரத்தில் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி  ஆசிரியர் சோமசுந்தரத்திற்கு கையில் சிறு காயம் ஏற்பட அவரை ஆசிரியர் மணிகண்டன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
அப்போது அங்கிருந்த பணி மருத்துவர் உங்கள் பள்ளி மாணவன் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம் என்று தகவல் சொல்ல காயத்திற்கு மருந்து கட்டுவதை மறந்து இரு ஆசிரியர்களும் தஞ்சை நோக்கி சென்றார்கள். அங்கு மாணவன் அருண்பாண்டியன் சிகிச்சை பெறும் அவசர சிகிச்சைப் பிரிவில் சென்று பார்த்த போது மூச்சுக்காக பிராணவாயு வைத்து, கண்கள் மேல் நோக்கி, எந்த அசைவும் இல்லாத நிலையில் இருந்துள்ளான்.. அருகில் நின்ற மருத்துவர்கள் சிலிண்டரை நிறுத்தினால் உயிர் நின்றுவிடும் நிலையில் உள்ளது என்று சொல்ல.. கண் கலங்கிய ஆசிரியர்கள் மாணவன் காதருகே சென்று முதலில் மணிகண்டன்.. தம்பி விழிச்சுப் பார் யா.. யார் வந்திருக்கிறது என்று அடுத்தடுத்து பேச்சுக் கொடுக்க அதுவரை அசைவற்றுக் கிடந்த மாணவனின் கண்கள் லேசாக உருளத் தொடங்கியது.
அதைப் பார்த்த பிறகு மறுபடியும் இரு ஆசிரியர்களும் மாணவனிடம் அடுத்தடுத்து பேசப் பேச மாணவன் கண் விழித்தான் கை, கால்களை அசைத்தான்.. உனக்கு ஒன்றும் இல்லை நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கை ஊட்டி பேச பேச 7 நிமிடங்களில் சுய நினைவு பெற்றவனாக, சார் நீங்க எப்ப வந்தீங்க என்று கேட்க.. எங்களை தெரியுதா என்று ஆசிரியர்கள் கேட்க.. மணிகண்டன் சாரும், சோமு சாரும் என்று தெளிவாக சொன்னான். இதை எல்லாம் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர்களும்  செவிலியர்களும் ஆனந்தமடைந்து 10 சதவீதம் கூட உயிர் இல்லாமல் இருந்தான் இப்ப பிழைச்சுக்கிட்டான் என்று கூறினார்கள்.
அதுவரை கதறிக் கொண்டிருந்த பெற்றோரும் கண்ணீரை நிறுத்திவிட்டு ஆசிரியர்களின் கைகளை பற்றிக் கொண்டனர். எனக்கு ஒன்றும் இல்ல சார் நல்லா இருக்கிறேன் நீங்க போயிட்டு வாங்க சார் என்று சொன்ன பிறகு.. சார் ஒன்னுக்கு போகனும் என்று சொல்ல அருகிலேயே சிறுநீர் கழிக்க வைத்தனர். கை செலவுக்கு கூட பணமின்றி வந்த பெற்றோரிடம் அவசர தேவைக்காக சிறு தொகையை கொடுத்துவிட்டு ஆனந்த கண்ணீரோடு ஆசிரியர்கள் வெளியே வர தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தகவல் அறிந்து வந்து மாணவனை பார்த்தார்.
அதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரி சாமிசத்தியமூர்த்தி மாணவனின் நிலை பற்றி அடுத்தடுத்து போனில் கேட்டுக் கொண்டே இருந்தார்.
ஆசிரியர்கள் வெளியே வரும் வரை மாணவனை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களும் மாணவனுக்காக காத்திருந்தனர்.
நாங்கள் ஏற்றிய பிறகு உயிரை காக்க வேண்டும் என்று தான் போராடுறோம் அதே போல கொண்டு வந்துட்டோம். ஆனாலும் மருத்துவ சிகிச்சையைவிட ஆசான்களின் குரல் சிகிச்சை தான் மாணவனை காப்பாற்றி இருக்கிறது என்றனர்.
இரவு 9 மணிக்கு பிராணவாயு வேண்டாம் என்று அகற்றச் சொன்ன மாணவன் தனக்கு பசிக்கிறது என்று டீ வாங்கி வரச்சொல்லி குடித்திருக்கிறான். 10.30 மணிக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு அவன் நுரையீரலில் தேங்கியுள்ள சளியை அகற்றும் சிகிச்சை தொடங்கியுள்ளது.  பணி மருத்துவர்களும் ஆசிரியர்களை பாராட்டினார்கள். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படக் காட்சியை போல தஞ்சை மருத்துவக்கல்லூரியில் இரு ஆசிரியர்கள் செய்துள்ளனர் என அனைவரும் பரவலாக ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து ஆசிரியர் மணிண்டன்.. மாணவனுக்கு உடல்நலமில்லை என்பது மருத்துவமனைக்கு சென்ற போது தான் தெரியும். சுயநினைவின்றி அசைவற்று கிடந்தான். மருத்துவர்கள் சிலிண்டர் உதவியில் உயிர் இருப்பதாக சொன்னார்கள். ஒரு மாணவனின் முகத்தைப் பார்த்து மனதை படிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மூர்ச்சையாகி கிடந்த மாணவன் காதில் பேச பேச அவனது உணர்வுகள் தூண்டப்பட்டு அசைவு தெரிந்தது.
அதைப் பார்த்து அடுத்தடுத்து அவனை ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை பேச பேச கண் விழித்தான் நினைவோடு எங்களை அழைத்தான். இப்ப நல்லா இருக்கிறான். அதைப் பார்த்த மருத்துவர் மாணவன் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றார். ஆனாலும் தாய் தந்தைக்கு பிறகு ஆசிரியரின் அரவணைப்பில் இருக்கும் மாணவனின் மனதை படித்தோம் உயிரை பெற்றோம். எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஸ்கேன் எடுக்க அவனே நடந்து போய் இருக்கிறான் என்றார் ஆனந்த கண்ணீரோடு.....
வாழ்த்துக்கள் ஆசிரியர்களே..!


உண்மையான கதை

நண்பர்களே இதை கட்டாயமாக படிக்கவும் இது ஒரு உண்மையான கதை...

பெண்களின் மார்பகம் என்பது, குழந்தைக்கான உயிர்ப்பால் சுரக்கும் இடம். ஆனால், எல்லாக் காலங்களிலும் அது வெறும் காமத்துக்கான தசைக் குவியலாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது.

பெண்களின் மார்பகம் என்பது காமப் பொருள் அல்ல .ஒரு மனிதனின் உயிரூட்டி .என்பதை ஆண்கள் புரிய வேண்டும். அது காட்சிப் பொருள் அல்ல என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்

பெண்ணின் மார்பகம் பால் கொடுக்கும் உறுப்பாக பார்த்திருந்தால் அது காமத்தை தூண்டும் பொருளாக மாறிருக்காது

கழுத்திற்கு கீழ் அழகை காணும் காலம் மாறினால் மட்டுமே கற்பழிப்புகள் குறையும்..

Tuesday, July 17, 2018

நேரம் தவறாமை

 உங்கள் கடிகாரத்தைக் கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்கள். எவ்வளவு நேர்த்தியாக வினாடிகள், நிமிடங்கள், மணிகள் என ஓடிக் கொண்டே இருக்கிறது
காலையில் வேகமாகவும், மதியம் சோர்வாகவும், மாலையில் தூங்கியபடியும் அது ஓடுவதில்லை.
நேரம் தவறாமை ஒரு சின்ன செயலாக போலத் தோற்றமளித்தாலும், பாறையைப் பிளக்கும் உளி போன்ற வலிமை அதற்குண்டு.
நேரம் தவறாமல் இருக்கும் நபரை மற்றவர்கள் ரொம்பவே மதிப்பார்கள். தனது வாழ்க்கையை சரியாய் வாழத் தெரிந்தவரே நேரம் தவறாமையைக் கடை பிடிப்பார்.
நேரம் தவறாமல் சரியான நேரத்தில் வருபவர் எப்போதுமே திறமைசாலியாகவும், தன்னம்பிக்கை உள்ளவராகவும் பரிமளிப்பார். அவருக்கு பெரிய பொறுப்புகள் வந்து சேரும்.
'சரியான நேரத்தில் கலந்துகொள்ள வேண்டும்' என எப்போதுமே நினைக்காதீர்கள்.
பத்து நிமிடம் முன்னதாக இருக்க வேண்டும் என்று நினையுங்கள். அப்போது தான் சரியான நேரத்திலாவது நீங்கள் அங்கே இருக்க முடியும்.
தாமதமாய் வருவது பெரிய ஆட்களுக்கே உரிய தகுதி என்றோ, தாமதமாய் வந்தால் நீங்கள் பெரிய நபராகப் பார்க்கப்படுவீர்கள் என்றோ தயவு செய்து நினைத்து விடாதீர்கள்.
ஆம். சொந்தங்களே...!
உண்மையில், நேரம் தவறாமைதான் உங்களை தலைமைப் பண்பு உடையவராக சித்தரிக்கும்.
நேரம் தவறாமையை பழக்கப்படுத்திக் கொண்டால் தேவையற்ற பல மன அழுத்தங்களையும், மன உளைச்சல்களையும்  நீங்கள் வென்று விடலாம்.

மண்ணின் நலன் கருதி

கொட்டிக்கிடந்த நாவல்பழம் இன்னைக்கு கிலோ
நூத்தி அறுவது ரூவா..
நினைத்த போதெல்லாம் பறித்து உண்ட சப்போட்டா கிலோ எண்பது ரூவா..
 திட்டினாலும் திங்காத மாதுளை கிலோ நூத்தி எண்பது ரூவா..

 வீடு தோறும் இருந்த கொய்யா இன்னைக்கு கிலோ அறுவது ரூவா..
 வேலியில் படர்ந்து கிடந்தும் பழுக்கும் வரை தீண்டப்படாத கோவைக்காய் கிலோ அறுவது ரூவா..

 இறைந்து கிடந்த எலுமிச்சம்பழம் இன்னைக்கு ஒன்னு பத்து ரூவா..
 கேட்பாரற்று கிடந்த கொடுக்காப்புளி இன்னைக்கு கிலோ எண்பது ரூவா..

 சும்மா கிடந்த பப்பாளி இன்னைக்கு கிலோ நாப்பது ரூவா..

ரூவாக்கு பத்து வித்த நெல்லிக்காய் இன்னைக்கு கிலோ
நூத்தி இருவது ரூவா..
 தூக்கி எறிந்த சீத்தாப்பழம் இன்னைக்கு கிலோ எண்பது ரூவா..
 என்ன பாக்கறீங்க.... உங்களுக்கு இப்போ விவசாயத்தின் உண்மை நிலை புரிந்து இருக்கும்.

 இது மட்டும் இல்ல... இந்த விலை பட்டியலில் வேப்பம்பூ , மாம்பூ , மாதுளை பூ , செம்பருத்திப்பூ , நந்தியாவட்டை பூ , மகிழம் பூ மாதிரி மறந்து போன பல
பூக்களின் விலையும் சேர உள்ளது.
 மேலும் விரைவில் ஈச்சம்பழம், விளாம்பழம், வேப்பம்பழம், நார்த்தம்பழம், கருவேலங்குச்சி,  மருதாணி, வேப்பிலை, வில்வம், மாவிலை, நொச்சி, பவளமல்லி, அருகம்புல் எல்லாம் இந்த விலைபட்டியலில் சேர இருக்கு..
 ஆமா.... இதெல்லாம் என்ன விளைவிக்க முடியாத அதிசயப் பொருளா? இவ்வளவு விலை போட்டு வாங்குவதற்கு...
 விளைபொருளே இவ்வளவு விலைக்கு விற்கும் பொழுது இதை விளைவித்த விவசாயி எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருக்க வேண்டும்.
 ஆனால் அவர்கள் இருக்கும் நிலைமை என்ன? அவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களின் விலைகள் மட்டும் உச்சத்தில் உள்ளன. ஆனால் அதை விளைவித்த விவசாயி இருக்கும் இடம் தெரியாத இடத்தில் இருக்கிறான்.
 எப்படியோ இன்னும் சில வருடங்களில் விளைபொருட்கள் அனைத்தையும் அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டியிருக்கும்.
 அப்பொழுது தான் விவசாயிகளின் நினைப்பு நமக்கு வரும். ஆனால் அப்பொழுது இவர் தான் விவசாயி என்று கூறுவதற்கு கூட விவசாயிகள் இருக்க மாட்டார்கள்.
 விவசாயத்தின் அழிவையும், விவசாயிகளின் நிலையையும் சற்று நினைத்து பாருங்கள். மேலே விலைபட்டியலில் சொல்லப்பட்ட பொருள்கள் எல்லாம் மந்திரப் பொருட்களோ, அதிசயப்பொருட்களோ அல்ல.
 சாதாரணமாக மண்ணில் விளையும் விளைபொருட்கள் தான்.
ஒவ்வொருவருக்குள்ளும் விவசாயி இருக்கிறார். உங்களுக்குள் இருக்கும் விவசாயியை கண்டுபிடித்து வெளிக்கொண்டு வாருங்கள்.
யார் விதைத்தாலும் விதைகள் முளைக்கும்....
யார் நட்டாலும் செடிகள் வளரும்...
என்றும் உங்களால் முடிந்த வரை வீட்டிலேயே வீட்டு தேவைக்காக மரங்களை நட்டு வளருங்கள். வருங்கால நம் சந்ததியினருக்கு இந்த பழங்களாவது கிடைக்கும்.
சந்ததியினருக்கு சொத்து சேர்ப்பது மட்டும் அல்ல நம் கடமை. அவர்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு இந்த சுற்றுச்சு ழலை அமைத்து தருவதும் நம் கடமை தான்...
மண்ணின் நலன் கருதி,

இதாங்க சரி



அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்....
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...

ஆயிரம் பேரை கொன்றவன்
அரை வைத்தியன்...
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....
சூடு அல்ல சுவடு...
சந்தையில்
மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய்
சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க
சரி...

படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....
இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ...........
படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...

காலப்போக்கில்....நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்...

ரூஒரு லட்சம் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும்

வங்கிகளின் 'ருபே கார்டு' பெற்றவர்கள் 90 நாட்களுக்கு ஒரு முறையாவது ஏ.டி.எம்., பயன்படுத்தினால் தான், ரூ.ஒரு லட்சம் இன்சூரன்ஸ் திட்டம் கார்டுதாரர்களுக்கு பயன்படும்.

பிரதமரின், 'தன் ஜன் யோஜனா' திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு ஒரு வங்கி கணக்கு திட்டம் உள்ளது. இதில் டெபாசிட் இன்றி சேமிப்பு கணக்கு துவங்கலாம். நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கும் வங்கிக்கணக்கு துவங்கப்பட்டு, 'ருபே கார்டு' வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு இல்லை

இந்த கார்டில் விபத்து பாலிசியாக ரூ.ஒரு லட்சம் இணைக்கப்பட்டுள்ளது. கார்டு வைத்திருப்பவர் விபத்தில் இறந்தால் வங்கிக் கணக்கு உள்ள கிளைக்கு சென்று, படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின் ரூ.ஒரு லட்சம் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும். விபத்தில் நிரந்தர உறுப்புகள் இழப்பு, செயலிழப்பு ஏற்பட்டால் அதற்குரிய தொகையும் வழங்கப்படும்.

வங்கியில் வரவு, செலவு செய்யாமல் 'ருபே கார்டு' வைத்திருந்தாலும் இன்சூரன்ஸ் உண்டு. அத்தகைய கார்டுதாரர்கள் 45 நாட்களுக்கு ஒருமுறை ஏ.டி.எம்., இயந்திரத்தில் கார்டை மட்டும் செருகி எடுக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

கிராமப்புறங்களில் வங்கி இல்லாத இடங்களில் வங்கித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் உள்ள சிறிய இயந்திரத்தில் 'ருபே கார்டை' செருகி எடுத்தாலும், கார்டு நடைமுறையில் இருக்கும். இதுகுறித்து வங்கிகளும், வங்கித் தொடர்பாளர்களும் கார்டுதாரர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. இதனால் மத்திய அரசு தற்போது 90 நாட்களுக்கு ஒருமுறையாவது கார்டை ஏ.டி.எம்.,மில் பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. 'ருபே கார்டு' வைத்திருக்கும் அனைவருக்குமே இன்சூரன்ஸ் திட்டம் பொருந்தும் என, வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Sunday, July 15, 2018

நான் சொல்வதை முழுவதும்மாக படித்து அதன்படி செய்தாலே போதும் உங்களிடம் 10நிமிடத்திற்குள் மட்டுமே செலவு 1000ரூபாய் பணம் உருதிசெய்யலாம் மொத்தமாக 4விதிமுறைகள் மட்டுமே உள்ளது
1)முதலில் கீழே தருகின்ற லிங்க் வழியாகசென்று டவுன்லோட் செய்யுங்கள்
2)அதில் ரிஜீஷ்டர் கேட்கும் அதில் உங்களது பேங்க்வுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை உள்ளிடவும்
3)அதன்பின்னர் உங்களது பேங்க் எதுவோ அதைதேர்வு செய்து இணைத்து கொள்ளுங்கள் அவ்வபோது உங்களுக்கு பாதுகாப்பிர்க்கு password அல்லது upi pin செட் செய்யுமாறு கேட்கும் செய்து கொள்ளுங்கள்
4)அதன் பின்னர் அதில் contact என்று இருக்கும் அதில்சென்று உங்கள் நண்பர்கள் அல்லது வேறுபேங்க் அக்கவ்டிர்க்கு 1ரூபாய் அனுப்பியவுடனே 1000கிடைத்துவிடும் அதனை அப்படியே உங்கள் அக்வ்ண்ட்டில் மாற்றி கொள்ளலாம்
அவ்வளவு தான் முயற்சி செய்து பாருங்கள்
பயப்பட தேவையில்லை இது இந்திய அரசின் அங்கிகாரம் பெற்ற பதுகாப்பான phonepe நிறுவனமே
https://phon.pe/ru_rajegajd2

Tuesday, July 3, 2018

படித்ததில் பிடித்தது

சத்தியமா  சுப்பர்  ஸ்டோரிங்க இது  தவராமல்  படித்ததும்  பகிருங்கள் """நண்பர்களே"""

ஒரு குட்டி கதை.....

ஒரு ஊரில் பெரிய *கோயிலில் கோபுரத்தில்*
நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன,

திடீரென்று *கோயிலில் திருப்பணி* நடந்தது

அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு
இடம் தேடி பறந்தன

வழியில் ஒரு *தேவாலயத்தை கண்டன*

அங்கும் சில புறாக்கள் இருந்தன

அவைகளோடு இந்த புறாக்களும்
குடியேறின.

சில நாட்கள் கழித்து *கிறிஸ்துமஸ்*
வந்தது.

தேவாலயம் புதுப்பிக்க தயாரானது

இப்போது இங்கு இருந்து சென்ற
பறவைகளும்
அங்கு இருந்த பறவைகளும்
வேறு இடம் தேடி பறந்தன .

வழியில் ஒரு *மசூதியை கண்டது*

அங்கும்
சில புறாக்கள் இருந்தன.
அவைகளோடு
இந்த புறாக்களும் குடியேறின

சில நாட்கள் கழித்து *ரமலான்*வந்தது
வழக்கம் போல்
இடம் தேடி பறந்தன.

இப்போது மூன்று இடத்திலும் உள்ள
புறாக்களும் கோயிலில் குடியேறின...

*கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை
ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.*

ஒரு குஞ்சுப்புறா தாய் புறாவிடம் கேட்டது
"ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் ?"
என்று...

அதற்கு அந்த தாய் புறா சொன்னது

"நாம்
இங்கு இருந்த போதும் புறா தான்,

தேவாலயத்துக்கு போனபோதும் புறா
தான்,

மசூதிக்கு போன போதும் புறா தான் ",

"ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் இந்து"
சர்ச்க்கு போனால்
கிறிஸ்த்தவன்"
மசூதிக்கு போனால்"முஸ்லிம்" என்றது;

குழம்பிய குட்டி புறா"
*அது எப்படி நாம் எங்கு போனாலும் புறா தானே அதுபோல தானே மனிதர்களும்* "என்றது.

அதற்கு தாய் புறா "

இது புரிந்ததனால்
தான் நாம் *மேலே இருக்கிறோம்,*
அவர்கள் *கீழே இருக்கிறார்கள்"* என்றது..
 . . . .


மிளகில் இருக்கு சூட்சுமம்



ஒரே ஒரு மிளகு போதும்... உண்ணும் உணவு சுவையாக. இருக்கும் ...
🎄இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளி காணாமல் போகும்.
🐝மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்து தலைக்கு தேய்த்தால் கேசம்கூட முசு முசுவென்று வளரும்.
🎄நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும்.
🐝ஐந்து மிளகும் சுக்கும் திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும்.
🎄ஆறு மிளகெடுத்து பெருஞ்சீரகம் (சோம்பு) இடித்து உண்ண, மூலநோய் வந்த சுவடின்றி தானே மறையும்.
🐝ஏழு மிளகை பொடி செய்து நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால் நல்ல பசி எடுக்கும். தொண்டைப்புண்ணும் தொண்டைக்கட்டும்  விட்டுப் போகும்.
🎄எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் வாந்திகூட எட்டி நிற்கும்.
🐝ஒன்பது மிளகும் துளசியும், ஒவ்வாமையை (அலர்ஜி) துரத்தியடிக்கும்.
🎄பத்து மிளகை வாயில் போட்டு கடித்து மென்று விட்டு, பகைவன் வீட்டிலும் பயமேயின்றி விருந்துண்ணலாம்.ஷ...ரு🌳
வாழ்கை தத்துவமும் ஆரோக்கிய தகவல்களும்..

காவல்காரனையும் காக்கவேண்டியது நம் கடமை அல்லவா


கல்லீரல் - மனித உடலின் மிகப் பெரிய ரசாயனத் தொழிற்சாலை!
ஊட்டச் சத்துக்களை உடைத்து உடலுக்குத் தேவையானப் பொருளாக மாற்றி, உடலின் பல பகுதிகளில் சேகரித்துவைப்பது, நச்சுப் பொருட்களை வெளியேற்றுவது என ஆயிரக்கணக்கான பணிகள் இங்கே நடக்கின்றன.
உடலின் மிகப் பெரிய உள் உறுப்பு, மிகப் பெரிய சுரப்பி, வெட்டினாலும் மீண்டும் வளரக்கூடியது...  இப்படிப் பல்வேறு சிறப்புகளைக்கொண்ட உறுப்பு...
கல்லீரல்.
'மனிதனின் வலது வயிற்றுப் பகுதிக்கு மேல், உதரவிதானத்தை ஒட்டியபடி அமைந்துள்ள முக்கோண வடிவ உறுப்பு இது. பிரச்னையை வெளியே காட்டாமல் சமாளிக்கக்கூடியது. அதனால், பிரச்னை முற்றும் வரை வெளியே தெரியாமலேயே இருக்கும்.
பாதிப்பானது 50 முதல் 60 சதவிகிதத்தைத் தாண்டும்போதுதான், அதன் அறிகுறிகள் நமக்குத் தெரியவரும்'' என்று கல்லீரல்பற்றிய ஆச்சர்யத் தகவல்
''கல்லீரலின் சின்தடிக் பணி என்றால், ரத்தம் உறையத் தேவையான புரதம் உள்ளிட்ட ஏராளமான நொதிகள், கொழுப்பு, கார்போஹைட்ரேட் போன்ற உடலுக்குத் தேவையான பல பொருட்களை உற்பத்தி செய்வதாகும். இதில் ஒரு என்சைம் சுரப்பது தடைபட்டாலும் ஊட்டச் சத்தை உடைக்கும் பணி தடைபட்டு, வளர்சிதை மாற்றப் பணியில் தடை ஏற்பட்டுவிடும். இதை 'மெட்டபாலிக் டிஸ்ஆர்டர்’ என்பார்கள். அடுத்ததாக 'டீடாக்சிஃபிகேஷன்’. அதாவது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை, மருந்துகளை நீர்த்துப்போகச்செய்து வெளியேற்றுவது.
உதாரணத்துக்கு புரதம் உடைக்கப்படும்போது, அது அமோனியாவை வெளிப்படுத்தும். உடலில் அமோனியா அளவு அதிகரித்தால், உயிரிழப்பு வரைக்கும் கொண்டுசெல்லும். எனவே, அந்த அமோனியாவை யூரியாவாக உடைக்கும் பணியைக் கல்லீரல் செய்கிறது. இது ஐந்து கட்டங்களாக நடக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு என்சைம் தேவைப்படும்.
இம்யூனாலஜிக்கல் பணி என்பது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மைக்கு உதவுவது. 50 முதல் 60 சதவிகித நோய் எதிர்ப்புத் தன்மைக்கு கல்லீரலே காரணம். கல்லீரல் செயல் இழந்தால், இந்தப் பணிகளும் பாதிக்கப்படும்.
உடலின் நச்சுப் பொருளை வெளியேற்ற டயாலிசிஸ் கருவிகள் உள்ளன. ஆனால், மற்ற பணிகளைச் செய்ய இது வரை எந்த இயந்திரமும் இல்லை.
கல்லீரல் செயல் இழந்துவிட்டால், அதற்கு ஒரே தீர்வு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான். இதற்கானச் சிகிச்சைக் கட்டணம் பல லட்சங்களைத் தாண்டும்.
கல்லீரல் பிரச்னைகளை, குழந்தைகளுக்கு,  பெரியவர்களுக்கு என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். குழந்தைகளுக்கானப் பிரச்னைகள் பிறவியிலேயே வரக்கூடியவை.
பெரியவர்களுக்கு ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் அல்லாத காரணங்களால் கல்லீரல் நோய்கள் ஏற்படுகின்றன''
காக்க காக்க!
கல்லீரல் காக்க காக்க!
√√ நடுஇரவு 1:00 மணி முதல் விடியற்காலை 3:00 மணி வரை கல்லீரலின் நேரம் .
இந்த_நேரத்தில் நாம் உட்கார்ந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது .
கட்டாயம் படுத்திருக்க வேண்டும் .
உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது .
இந்த பணியை நாம் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதியுருவோம் ...!!!
#கொழுப்பை_குறைப்போம்
உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள். அதிகப்படியான கொழுப்புதான் கல்லீரல் பிரச்னைக்கு மிக முக்கியக் காரணம். கொழுப்பு கல்லீரல் திசுக்களில் சேகரித்துவைக்கப்படும்
போது, கல்லீரல் திசுக்கள் பாதிக்கப்படும். நாள் ஆகஆக பாதிக்கப்பட்ட கல்லீரல் செல்களும் அழிந்துவிடும். பின்னர், அந்தக் கொழுப்பு ரத்தத்தில் பயணித்து உடலின் வேறு பகுதிகளுக்கும் சென்றுவிடும். இப்படி லட்சக்கணக்கில் கல்லீரல் செல்கள் அழியும்போது கல்லீரல் சுருக்கம் (Liver Cirrhosis)ஏற்படும். இதைத் தவிர்க்க உணவில் கொழுப்பு அளவைக் குறைக்க வேண்டும். நாம் சாப்பிடும் உணவில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரியைக் கொழுப்பாக மாற்றும் பணியைக் கல்லீரல் செய்கிறது. சராசரியாக பாசல் மெட்டபாலிக் ரேட் (basal metabolic rate) என்பது ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 1,600 - 1,800 கலோரியாகவும் பெண்களுக்கு 1,300 முதல் 1,500 கலோரியாகவும் இருக்க வேண்டும்.
உங்கள் உடலுக்கு ஏற்ற பாசல் மெட்டபாலிக் ரேட் எவ்வளவு என்பதைக் கண்டறிந்து, அதற்கு ஏற்ற வகையில் உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள். பாடி மாஸ் இன்டெக்ஸ் குறியீடு 17 முதல் 24.99 என்ற அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம்.
#இயற்கை_உணவு
ஆட்டிறைச்சியையும் மாட்டிறைச்சியையும் தவிர்க்க வேண்டும். மாற்றாக, மீன் சாப்பிடலாம். அதுவும் எண்ணெயில் பொரிக்காமல், குழம்பு மீன்களாகச் சாப்பிடலாம். காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகளை சாப்பாட்டில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். உடல் பருமன் ஏற்படாமல் இருக்க, ஐஸ்கிரீம், நொறுக்குத் தீனிகள், சாஃப்ட் டிரிங்க்ஸ் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள். இது மாரடைப்பு, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்றவற்றையும் தவிர்க்க உதவும்.
உடற்பயிற்சி
கொழுப்பைக் கரைக்கவும் உடல் எடையைக் குறைக்கவும் உடற்பயிற்சி நல்ல வழி. நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங், யோகா... உங்களுக்குத் தோதான உடற்பயிற்சி எதுவோ, அதைச் செய்யுங்கள். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்
கொள்ளுங்கள்.
மதுவுக்கு_நோ__நோ
மது அருந்தும்போது அது கல்லீரலைத்தான் சென்று அடைகிறது.
இதனால் கல்லீரலில் உள்ள செல்களுக்குப் போதுமான ஆற்றல் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றன.
செல்கள் பாதிக்கப்படும்போது, அந்த இடத்தைக் கொழுப்பு ஆக்கிரமித்துக்
கொள்ளும். இதனாலும், கல்லீரல் பெரிதாகும். பின்னர் அந்த செல் முற்றிலும் இறக்கும்போது, சுருங்குதல் என்பது நடக்கும். பாதிப்பைத் தானாகவே சரிசெய்துகொள்ளும் தன்மை உள்ளதால், கல்லீரல் புதிய செல்களை உற்பத்தி செய்யும். ஆனால், அந்த நேரத்தில் கல்லீரல் புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க மது அருந்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.
பாதுகாப்பான_குடிநீர்
எலிக் காய்ச்சல், டைஃபாய்டு போன்ற வைரஸ் மூலம் பரவும் நோய்கள் கல்லீரலில்தான் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கல்லீரலில் ஹெபடைடிஸ் ஏ, பி, சி என பல வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. இந்தக் கிருமிகள் அசுத்தமான தண்ணீர், ஆரோக்கியமற்ற சூழ்நிலையில்தான் பரவுகின்றன. எனவே, சுத்தமான தண்ணீரும் உணவும் கல்லீரல் பாதுகாப்புக்கு முக்கியமான அம்சங்கள். இதில் கவனம் செலுத்துங்கள். ஹெபடைடிஸ் ஏ, பி-யைத் தவிர்க்க தடுப்பு ஊசியும் போடலாம்.

பரிசோதனை
பிறந்த குழந்தைகளுக்குச் சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம், 101 வகை வளர்சிதை மாற்றப் பிரச்னைகளைக் கண்டறியலாம். ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்தால், அதைக் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மருந்து
அதீதமான மருந்துப் பயன்பாடும் கல்லீரலைப் பாதிக்கும். எனவே, மருத்துவர்களின் பரிந்துரை இன்றி மருந்துகள் எடுத்துக்கொள்வதைத் தவிருங்கள்.
ஹெல்த்_செக்கப்
பொதுவாக 35 முதல் 50 வயதுக்குள் இருப்பவர்கள்தான் கல்லீரல் பாதிப்பை அதிகம் எதிர்கொள்கிறார்கள். எனவே, இந்த வயதினர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வருடத்துக்கு ஒரு முறை கட்டாயம் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ செய்துகொள்வது நல்லது. வாய்ப்பு இல்லாவிட்டால், கல்லீரல் செயல்பாடு பரிசோதனையாவது செய்துகொள்ள வேண்டும்.
எல்லாவிதத்திலும் நம் உடலுக்குக் காவல்காரனாக இருக்கும் கல்லீரலை நாம் எந்த அளவுக்குப் பாதுகாப்பாகப் பராமரிக்கிறோம் என்பதை எல்லோரும்
சுயப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது.
காவல்காரனையும்
காக்கவேண்டியது
நம் கடமை அல்லவா!

நீர்கோவை

மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும்.
சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும்.
நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும்.
நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்.
தூய்மையான அருகம்புல்லை எடுத்து நன்றாக மென்று பற்களில் வலியுள்ள பகுதியில் ஓதுக்கினால் பல்வலி உடனே குணமாகும்.
பல் துலக்கி பின் தேனை ஈறு முழுவதும் தடவவேண்டும். சிறிது நேரம் கழித்து வாயைக்கொப்பளித்தால் பற்களில் உள்ள கிருமிகள் அழியும்.
தேங்காய் எண்ணெயை நாள்தோறும் பலமுறை உதட்டில் தடவினால் உதடு வெடிப்பு உதட்டு புண், தோல் உரிதல் ஆகியன குணமாகும்.
அரிசியையும் திப்பிலியையும் சிறிதளவு எடுத்து தேனில் பத்து நாட்கள் ஊறவைத்து தினம் ஒரு திப்பிலியை வாயில் போட்டு அடக்கிக்கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
மழைக்காலத்தில் ஒரு தம்ளர் பாலில் சிறிதளவு சுக்கு பொடி கலந்து இரவு குடித்து வந்தால் காலையில் புத்துணர்வு பெறலாம்.
துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும்.
அரிசி பொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்த கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும்.
தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங்காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டையும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம். இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும்.
மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும்.
கண்களில் நீர்வடியும் பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று தின்றால் நீர் வடிதல் குணமாகும்.
தூய்மையான தாய்ப்பாலில் இருதுளியைக் கண்களில் விட்டால் கண் சூடு, கண் எரிச்சல் ஆகியன குணமாகும்.
மாதுளை இளைச்சாற்றில் சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.
சித்தரத்தையைச் சிறிதளவு எடுத்துப்பொடித்து, பசும்பாலில் கலந்து உட்கொண்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் குணமாகும்.
பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப்  பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.
எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதை சூடு படுத்தி சிறிது தேன் கலந்து நாள் ஒன்றுக்கு 3வேளை வீதம் உள்ளங்கையில் விட்டு உட்கொள்ள வேண்டும். இதனால் தொண்டை வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும்.
வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றை பருகினால் வறட்டு இருமல் குணமாகும்.
தேனையும், எலுமிச்சை பழசாற்றையும் சமஅளவில் உட்கொண்டால் சளி இருமல் ஆகியன குணமாகும். நீர்கோவை விலகும்.

வறுத்த பூண்டு அற்புதபலன்கள்


வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?
பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.

பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.
மேலும் பூண்டுகள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும்.
இத்தகைய பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது.

வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.

2-4 மணிநேரத்தில் பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.

4-6 மணிநேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.

6-7 மணிநேரம்
பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்..

7-10 மணிநேரம்
இக்காலத்தில், பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.

10-24 மணிநேரம்
முதல் 1 மணிநேரத்தில் ழுண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.

அவையாவன:

* கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும்.

* தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

* இரத்த அழுத்தத்தை சீராக்கும்.

* உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.

* உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.

* எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.

* அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும்.

* உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும் 

Monday, July 2, 2018

கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை

கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு.
1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்?
2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன்
வாழ்கின்றார்கள்?
3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம் ஏற்படுகின்றது?
4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க வேண்டுமா?
போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இப்பதிவு.
பதிவிற்குள் செல்வதற்குமுன் ஒரு கதையை பார்த்துவிடுவோம்.
சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக
இருந்தபோதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.
வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை தியானத்திலும் பிராத்தனையிலும்  செலவிட்டான். எந்த அளவிற்கு அவன்
பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த
அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டன.
அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான்.
தனது இன்பத்திற்காக எந்த ஒரு
கொடுமையான செயலையும்
குணமுடையவனாக அவனிருந்தான்.
அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில் சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள்.
இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட இல்லை. அவனுக்கு
சித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது என்பது வாடிக்கையான வேலை.
இதன் காரணமாக ஒரு கட்டத்தில்
இருவரிடையே சண்டையே வந்துவிட்டது.
கோபத்தில் வெகுண்டெழுந்த சித்தன் இறைவன்மீது தனது பக்தி உண்மையாயிருந்தால்
இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த
தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய் என்று சாபமிட தொடங்கினான். சிரித்துக்
கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லை என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும்
என்ற சவாலுக்கு இழுத்தான்.
இதற்கு ஒப்புக்கொண்ட சித்தன் தீவிரமான பிராத்தனையில் ஈடுபட்டான்.
போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில்
வித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு. அதிகமான பறவைகளையும்
விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தான். வரும்வழியில் களைப்பு
தாங்காமல் ஒரு மரதினடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ
உருத்துவதுபோல் இருந்ததனால் என்ன? என்று விலக்கி பார்த்தான். கணக்கிட முடியாத
செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை பார்த்து, அதையும் மூட்டையாக கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன்
வீடு திரும்பினான். இதற்கிடையே வயலில் வேலை செய்துகொண்டிருந்த சித்தனை மாடு முட்டி கடுமையான காயங்களுடன்
படுத்தபடுக்கை ஆக்கிவிட்டது விதி.
இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது
அசிங்கம் என்று சித்தனின் மனைவி
அவனைவிட்டு நீங்கினாள். தனது நிலையை நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு
நொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை
என்ற முடிவுக்கு வந்தான் சித்தன். உடல் ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்து
கொள்ள முடியவில்லை.
எப்படியோ எழுந்து தன் விட்டிற்கு பின்னடியுள்ள கிணற்றில்
குதித்தான். திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான். ஆம் எந்த
தெய்வத்தை அவன் பக்தியுடன்
வணங்கினானோ அதே தெய்வம் அவனை காப்பாற்றி காட்சியும் கொடுத்தது. உடலாலும்
மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு வணங்க
தோனவில்லை, மாறாக சண்டை போட தொடங்கினான். தனது ஆதங்கத்தையும்
ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான்.
அனைத்தையும் பொருமையுடன்
கேட்டுகொண்டிருந்த கடவுளோ அவனை தன்னோடு அனைத்து கொண்டார். அவனின்
அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான் சித்தன். இப்பொழுது கடவுள் பேச தொடங்கினார், சித்தா நீ இப்பிறவியில் நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில்
வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய்.
நீ உன் மனைவியை மதித்தது கூட
கிடையாது. மாறாக வித்தனோ முன்பிறவியில் நல்ல காரியங்களையே செய்து வந்தான்,
அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ
செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது.
என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ அனுபவிக்க வேண்டிய கர்மத்தின்
பெருபாலனவையை நானே ஏற்றுகொண்டேன்,.மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே
அனுபவிக்கின்றாய். ஆன்மீகத்தை தொடங்கும் ஒருவன் முதலில் அவனது பாவபதிவையே
அனுபவிக்க தொடங்கின்றான், மாறாக அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன்
செய்த புண்ணியங்களை அனுபவித்தபின் அவன் பாவபதிவுகள் செயல்பட தொடங்கும்.
வித்தனுக்கு கிடைத்த புதையலே
அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும்.
அவன் செய்த அனைத்து புண்ணியங்களும்
ஒட்டுமொத்தமாக செயல்பட்டு அவனுக்கு புதையலாக கிடைத்தது. இதுவரை நீ
அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து பாவங்களும் கரைந்துவிட்டன. இனி
நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து
தெரிந்து கொள் என்று சில
அறிவுரைகளையும் கூறி மறைந்தார் கடவுள்.
நாட்கள் செல்ல செல்ல சித்தனின் உடல்நிலை நலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய
உறவினருக்கு வாரிசு இல்லாததால்அவரது
சொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்கு கிடைத்தது. நல்ல குணமுடைய மனைவியும்
சித்தனுக்கு அமைந்தாள். அதே சமயத்தில் வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி
படுத்தபடுக்கையாகி விட்டான். அவனது மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன்
கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன்
சொத்துக்கள் அனைத்தையும்
பரித்துக்கொண்டு வெளியே துரத்திவிட்டனர்.
தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய சித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே
தங்க செய்து உதவினான்.
ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது
நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை எனப்படுவது. அது நல்லதாக இருந்தால்
நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.
ஆனால் இந்த வினைகளிலிருந்து  தப்பிக்க.விதிவிலக்குகளும் உண்டு. அதுதான் "பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை
ஏற்படுத்தி விடுவது". இதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு உதாரணத்தை
பார்த்துவிடுவோம்.
நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் மீது கல்லை எறிந்தீர்கள் என வைத்துக்கொள்வோம்.
இது நீங்கள் செய்த செயல். அது அவர் காலில் பட்டு இரத்தம் வந்துவிடுகின்றது. இதை
வினை என்று எடுத்துக்கொள்வோம். அந்த
இடத்திலிருந்து நீங்கள் தப்பித்து
ஓடிவிட்டீர்களானால் அந்த நிகழ்வுக்கான
எதிர்வினை செயல்படும்.
எப்படியென்றால்
நீங்கள் ஒரு தெரு வழியே செல்லும்போது
உங்கள் கால் ஒரு கல்லில் மோதி இரத்தம் வர வேண்டும் என்ற ஒரு விதி செயல்படும்.
நீங்கள் அந்த வழியே செல்லும்போது இந்த
கர்மவினையிலிருந்து தப்பிக்க நினைத்தால் அந்த கல்லில் உங்கள் கால் படாமல் செல்ல
வேண்டும். ஆனால் கர்மங்களிருந்து ஒருவன்
தப்பிக்க நினைக்கும்போது அதாவது அந்த கல்லை தாண்டி செல்ல முற்படும்போது ஒரு
மாடோ அல்லது வண்டியோ உங்களை குறுக்கே வந்து தள்ளிவிடும். முடிவாக கால்
பட வேண்டிய இடத்தில் தப்பிக்க
நினைத்ததனால் தடுக்கி விழுந்து அதே கல்லால் உங்கள் தலையில் அடிபட்டுவிடும்.
ஆனால் அவருக்கு அடிப்பட்ட உடனே அதற்காக
வருந்தி அவரிடம் மன்னிப்போ அல்லது மருத்துவ உதவி செய்து விடுகின்றீர்கள் என
வைத்து கொள்வோம். இங்கேயும் அதே கர்மவினைதான் செயல்படும்.
அதாவது நீங்கள் அந்த தெரு வழியே செல்லும்போது உங்கள்
கால் அந்த கல்லில் மோதி இரத்தம் வர வேண்டும் என்ற அதே விதிதான் செயல்படும்.
ஆனால் அது செயல்படும் விதம்தான் வேறு.
எப்படியென்றால் நீங்கள் அதே தெரு
வழியாகதான் செல்வீர்கள், ஆனால் உங்களை அறியாமல் மாட்டு சாணியிலோ அல்லது
சேற்றிலோ காலை வைத்துவிடுவீர்கள்.
இதனால் எந்த கல்லால் உங்கள் காலில் அடிபட வேண்டுமோ, அந்த கல்லில் உங்கள் காலில்
உள்ள சேற்றை துடைப்பதற்காக
தேய்த்துவிட்டு சென்றுவிடுவீர்கள். அதாவது
பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுவீர்கள். இதில்
அந்த பொருளுக்கும் உங்களுக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
நீங்கள் செய்த செயலுக்கான விதிப்படி அந்த கல்லிற்கும் உங்கள் காலிற்கும் ஒரு தொடர்பு
ஏற்பட வேண்டும். அதை நீங்கள் செய்வதால் அந்த கர்மவினை அங்கேயே முடிவுபெறுகின்ற
து. இதைதான் " தலைக்கு வந்தது
தலைப்பாகையோடு போனது " என்பர் பெரியோர்கள். அந்த பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டால்
உங்கள் செயலுக்குரிய எதிர்வினையும் நடந்துமுடிந்து விடுகின்றது. உங்கள்
செயலை கொண்டே வினையும், வினையை கொண்டே எதிர்வினையும், அந்த
எதிர்வினையை செயல்படுத்த அந்த பொருளும் நிர்ணயிக்க படுகின்றதே தவிர மற்றபடி
ஒன்றுமில்லை. இதைத்தான் " தீதும் நன்றும் பிறர் தர வாரா " என்றனர். எந்த செயலுக்கும்
வினை ஏற்பட கூடாது என்றால் "நான்"
என்பதை விட்டுவிட வேண்டும்.
ஆன்மீகத்தில் இதற்கு பெயர் பூரண சரணாகதி.
அந்த விதிவிலக்கு என்பது கூட
இவர்களுக்குதான். தன்னை அறிய
முற்படுவதால் அவர்களுக்கு தரப்படும்சலுகைகள்தான் இது. ஏன் அவர்களுக்கு
மட்டும்??
எந்த ஒரு வினைக்கும் நீங்கள் தான் காரணம் என்ற புரிதல் ஏற்படும்போது உங்களை சுற்றி
நடக்கும் அனைத்தையும் ஏற்று கொள்வீர்கள்.
கடவுளே! எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை?
எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம்?
கெட்டவனெல்லாம் நல்லா இருக்கானே! என்ற எண்ணங்கள் மாறி உங்கள் தவறுக்கான
வினைகள்தான் தற்போது நீங்கள்
அனுபவித்துவரும் கஷ்டங்கள் என்ற ஆழமான புரிதல் ஏற்படும். புரிதல் ஏற்படும்போது
எதையும் ஏற்றுகொள்ளும் பக்குவம் வந்துவிடும். அப்படிப்பட்ட பக்குவத்தை
நீங்கள் அடையும்போது, உங்களின் 95% கர்மங்களை உங்களுக்காக வேறு ஒருவர்
அனுபவித்து விடுவார். காரணம்!!
நீங்கள் அவர்மீது கொண்டுள்ள அதிகப்படியான
அசைக்கமுடியாத நம்பிக்கையே ஆகும். அந்த அவர் ஏற்கனவே பிறவிகடலை கடந்தவராக
இருப்பார்.
ஞானி ஒருவர் கூட்டம் நிறைந்த ஒரு தெரு வழியே சென்று கொண்டு இருந்தார்.
திடீர் என்று அங்கே உள்ள சாக்கடையில் குதித்துவிட்டு பக்கத்தில் உள்ள தண்ணீர்
குழாயில் காலை கழுவிவிட்டு
சென்றுவிட்டார். இதை பார்த்தவர்களுக்கு அவர்
பைத்தியகாரன் என்று தோனலாம்.
ஆனால் அவரைபொறுத்தவரை பொருளுக்கும்
அவருக்கும் தொடர்பை ஏற்படுத்தி கொள்வது ஆகும். ஆனால் அவர் ஏற்படுத்திய தொடர்பு
அவருடையது அல்ல!! அவரை நம்பி இருப்பவர்களின் கர்மவினைகளை தான் அவர்
அச்செயலின் மூலம் தீர்த்து வைக்கின்றார்.
இது எப்படி சாத்தியம்?? என்ற கேள்வி வரலாம்!! அந்த ஞானியை பொறுத்தவரை
அவர் செய்யும் எந்த செயலுக்கும் வினை என்ற ஒன்று ஏற்படுவது கிடையாது.
காரணம்? அவர் உள்ளே வெறும் வெற்றிடம் தான் உள்ளது.
அதாவது அவருக்கு மனம் என்ற
ஒன்று கிடையாது!! உள்ளே சூன்யமாக தான்
இருக்கும்!! அவரிடம் எந்த எண்ணங்களும் உதிப்பதும் கிடையாது!! மறைவதும்
கிடையாது!! இதுவே " சும்மா இருப்பது "
என்று சொல்லப்படுகின்றது.
ஒருவன் அவர்மீது கொண்டுள்ள தீவிர பக்தியால் அந்த
வெற்றிடத்தில் இவனது எண்ணங்கள்
சுற்றிகொண்டிருக்கும். இவனுக்கு அன்று சாக்கடையில் விழுந்து அடிபட வேண்டும்
என்ற விதி இருக்கும், ஆனால் இவன் உண்மையாக இருப்பதால் இவனுக்கு பதிலாக
அந்த ஞானி அந்த விதியை முடித்து
வைக்கின்றார். மேலும் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவரின் எண்ண
அலைகளும் அங்கே உள்ள வெற்றிடத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும். இவர்கள் தன்
தவறை உணர்ந்து தனக்கு உண்மையாக நடக்க
தொடங்கும்போது அந்த ஞானி எதோ ஒரு செயலின் மூலம் இவர்களின் பாவபுண்ணிய
கணக்குகளை அழித்துவிடுவார்.
முடிவில் இவர்களும் அந்த ஞானியின் நிலைக்கே வந்துவிடுகின்றனர்.
அதனால் தான் ஞானிகள் அருகில் இருக்கும்போது எதையும்
கேட்காதீர்கள் என்று கூறுவது. காரணம்!!
நீங்கள் கேட்டுதான் பெறவேண்டும் என்ற
அவசியமே அங்கு கிடையாது. மாறாக நீங்கள்
கேட்க நினைப்பது கூட சிறியதாக தான் இருக்கும். அவர் கொடுக்க நினைப்பதோ கணக்கில் அடங்காதவையாக இருக்கும். இதற்கு அவரிடம் பூரண சரணாகதி அடைந்தலே
சிறந்தது ஆகும்.
இதில் பூரண சரணாகதி என்பது இனி அனைத்தும் உன் செயல் என பற்றுகளை துறப்பதுவே ஆகும்.
"நான்" என்ற எண்ணத்திற்கு பதிலாக இனி எல்லாம் "நீ" என்ற
எண்ணத்தை கொண்டு வருவதே சரணாகதி.
அதற்குபிறகு உங்களுக்கென்று தனிப்பட்ட எந்தவொரு செயலும் இருக்காது, இருக்கவும்
கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் செய்வதாகவே இருக்க
வேண்டும்.
இறைவனை நோக்கிய உங்களது பிராத்தனை அல்லது வேண்டுதல் எந்த முறையில் இருக்க
வேண்டும் என்பதை விளக்குவதே இப்பதிவு.
மேலும் இப்பதிவு முந்தைய பதிவான கர்மவினையின் தொடர்ச்சி ஆகும்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும்
சூழ்நிலைக்கு தகுந்தவாறு தேவைகள் என்பது
மாறிக்கொண்டே இருக்கும். அந்த
தேவைகளுக்கு தகுந்தவாறு
வேண்டுதல்களும் மாறிக்கொண்டே இருக்கும்.
ஆனால் ஆன்மீகத்தில் ஓரளவு புரிதல் உள்ளவர்களை பொருத்தவரை, அவர்களுடைய
வேண்டுதல் என்பது அவர்கள் வாழ்நாளில் "ஒரே ஒருமுறை" தான் இருக்குமே தவிர
ஒவ்வொரு முறையும் இருக்காது.
ஏனென்றால் அவர்கள் முடிவான ஒன்றை முதலிலேயே
வேண்டியும் விடுவர். அந்த வேண்டுதலில்
அத்தனையும் அடங்கியும் விடும். இதை புரிந்துகொள்ள ஒரு சிறு கதையை பார்ப்போம்.
ஒரு ஏழை தாயின் மகனுக்கு படிப்பு அவ்வளவாக வரவில்லை. அவளுக்கு.தெரிந்ததெல்லாம் அவள் வழிபடும் தெய்வம்
மட்டும்தான். தன் மகன் பரிட்சையில் தேர்ச்சி
பெற்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்
என்பது அவள் கனவு.கடவுளிடமும் இதை
குறித்து வேண்டுதல் வைக்கவே, மகனும் பரிட்சையில் தேர்ச்சி பெற்றான். ஆனால்
இவனது வினை வேலை கிடைக்கவே இல்லை.
மறுபடியும் கவலை கொண்ட தாய் வேண்டவே
மகனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது.
சிறிது காலம்தான் சென்றது மகனுக்கு விபத்து
ஏற்பட்டு படுக்கையில் இருந்தான். அத்தாய்க்கு தெரிந்ததெல்லாம் அவனே என்பதால் மறுபடியும் ஒரு வேண்டுதல்!!
இதுவே அத்தாய் கடவுளே "எனக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் கொடு"
என்று ஒரே ஒருமுறை மட்டும்
வேண்டியிருந்தால், அவள் வாழ்க்கை வசந்தமாகி இருக்கும்.
புரியும்படி கூற
வேண்டுமென்றால் ஒருவனுடைய வேண்டுதல் என்பது நிரந்தரமான முடிவான ஒன்றாக இருக்க
வேண்டும். அத்தாய் வேண்டியது எல்லாமே தற்காலிகமான தீர்வை தரக்கூடியது என்பதால்
ஒவ்வொரு முறையும் வேண்ட வேண்டிய அவசியம் இருந்தது. மேலும் எதிர்வரும்
கர்மவினை இதுதான் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கூடவே எனக்கு
இந்த தேவை நிறைவேறினால் நான்
நிம்மதியாக இருப்பேன் என்ற தவறான கணக்கை போட்டுக் கொண்டு தற்காலிக
தீர்வை நாடுகின்றோம்.
உண்மையில் எந்த ஒன்றில் எல்லாம் அடங்குமோ!! அடக்கமோ!! அந்த ஒன்றை
வேண்டுதலாக வைக்க வேண்டும். அப்படி.அந்த வேண்டுதல் நிறைவேறும் பொழுது
அவனுக்கு அனைத்தும் வசமாகி விடுகின்றது.
எனவே அவனது வேண்டுதல் என்பது ஒரே ஒருமுறையோடு முடிவடைந்து விடுகின்றது.
இதில் உங்களை சுற்றி உள்ளவர்களும் பயன்
பெறுவர். எப்படியென்றால் உங்கள்
அமைதியும் சந்தோஷமும் உங்களை சுற்றி
உள்ளவர்களையும் சார்ந்தே உள்ளது.
உங்கள் தாய்க்கு உடம்பு சரியில்லை என்றாலோ,
உங்கள் மனைவி கோபபட்டலோ, உங்கள்முன்.ஒரு நாய் குட்டி கஷ்டப்பட்டாலோ, உங்களுக்கு
பணக்கஷ்டம் ஏற்பட்டாலோ உங்களால் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க
முடியுமா?? முடியாதல்லவா!!
எனவே உங்கள்
அமைதி என்ற வேண்டுதல் நிறைவேற.உங்களை சார்ந்த மற்றும் உங்களை
சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை தரமும் நல்லவைகளாக மாற்றம் பெறகின்றன.
இப்பதிவு உங்களுக்கு தெளிவாக புரிந்தால் இறைவனை நோக்கிய உங்களது
பிராத்தனையும் ஒருமுறைதான்!!
******************************************************
சனாதன தர்மத்தின் அடிப்படை போதனைகளுள் ஒன்று கர்மநியதி. கர்மா என்றால் வினை என பொருள்படும்.
வினை என்றால் செயலாகும். ஆகவே, கர்மா என்றால் செயல். கர்மநியதி ஒரு பிரபஞ்சநியதி (universal law).
→ கர்மா (காரணம் – விளைவு)
கர்மா என்ற பிரபஞ்சநியதி, காரணம் மற்றும் விளைவு ஆகிய இரண்டின் அடிப்படையில் செயல்படுகின்றது. ஒரு செயலின் காரணம் நன்மையானதாக இருந்தால், அந்த செயல் நன்மையை விளைவிக்கும்.
அதுவே ஒரு செயலின் காரணம் தீமையானதாக இருந்தால், அந்த செயல் தீமையை விளைவிக்கும்.
→ மூன்றுவகை கர்மா
கர்மா மூன்று வகைப்படும்.
அவை:
1) சஞ்சித கர்மா – முந்தைய பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள நல்ல மற்றும் தீய கர்மாக்களின் மொத்த மூட்டை தான் சஞ்சித கர்மா.
2) பிராரப்த கர்மா – சஞ்சித கர்மாவின் ஒரு சிறுபகுதி தான் பிராரப்த கர்மா. இது இந்த பிறவியில் அனுபவிக்கவேண்டிய நல்ல மற்றும் தீய கர்மபலன்கள்.
3) ஆகாமி கர்மா – இந்த பிறவியில் செய்யும் நல்ல மற்றும் தீய கர்மாக்கள் ஆகமி கர்மா எனப்படும். இவை பிறவியின் இறுதியில் சஞ்சித கர்மாவோடு சேர்க்கப்படும்.
→நல்ல கர்மா மற்றும் தீய கர்மா
இதுதான் நல்ல கர்மா, இதுதான் தீய கர்மா என்று நிலையாக கூறிவிட இயலாது. செயல் என்பது இடம், சூழ்நிலை ஆகியவற்றை பொறுத்து வேறுபடும். ஒருவன் தன்னுடைய செயலின் காரணம் நன்மையானதா தீமையானதா என்று ஆராய்ந்து அறியும் பக்குவத்தை சனாதன தர்மம் புகட்டுகின்றது.
அதற்காக தான் பல புராணங்களும் இதிகாசங்களும் இந்துதர்மத்தில் உள்ளன. மற்றவர்களின் செயல்களால் நாம் கற்றுக் கொள்ளும் பாடம் அளப்பரியது.
கர்ணனை பலர் மத்தியில் கேலிசெய்து அவமானப்படுத்தினாள் திரௌபதி, அந்த கர்மவினையின் விளைவால் அவள் பலர் மத்தியில் அவமானப்பட நேரிட்டது.
ஒருதீங்கும் இளைக்காதவனை சுட்டுக் கொல்வது தீய கர்மா, ஆனால் நாட்டையே அழிக்கும் நோக்கத்தில் செயல்படும் தீவிரவாதியை ஒரு ராணுவவீரன் கொல்வது தீயகர்மா ஆகாது.
ஏனென்றால், ஒரு ராணுவவீரனின் கடமை என்ன? நாட்டுமக்களைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றவேண்டும் என்பதே.
அவனின் கடமையிலிருந்து அவன் பின்வாங்கினால், அதுதான் அவனுக்கு தீயகர்மா. இதனால் தான் திருவள்ளுவர், கொல்லாமை எனும் அதிகாரத்தில் ஓருயிரையும் கொல்லக் கூடாது என்றும்; செங்கோன்மை எனும் அதிகாரத்தில் ”கொடியவர்களைக் கொலைத் தண்டனையால் அழிப்பது பயிர்களைக் காக்க களையைப் பிடுங்குவது போல” எனக் குறிக்கிறார். திருவள்ளுவர் முரணான கருத்துகளைக் கூறுவாரா? இல்லை.
கொல்லாமை எனும் அதிகாரத்தை சன்னியாசிகளுக்கும், செங்கோன்மை எனும் அதிகாரத்தை அரசர்களுக்கும் இயற்றியுள்ளார்.
எந்தவொரு உயிரையும் கொல்லக் கூடாது என்பது சன்னியாசிகளின் தர்மம்; நல்லவர்களைக் காப்பதற்காக தீயவர்களை அழிக்கவேண்டும் என்பது அரசனின் தர்மம். (அரசன் – நாட்டின் தலைவன்; சன்னியாசி – உலகவாழ்வை துறந்தவன்)
ஆகவே, ஒரு செயலை விட அந்த செயலின் பின்னால் இருக்கும் காரணம் தான் மிக முக்கியமாகும்.
ஒரு செயலை எந்த காரணத்திற்காக செய்கிறோம் என்பதை ஆராயவேண்டும். அந்த செயல் சுயநலமற்றதாக இருக்கவேண்டும்; எந்த அப்பாவி உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காததாக இருக்கவேண்டும்;  தர்மநியதிகளையும் இயற்கைநியதிகளையும் மீறாதபடி இருக்கவேண்டும்;  சட்டவிதிமுறைகளை மீறாதபடி இருக்கவேண்டும்.
 → கர்மாவும் மறுபிறப்புச் சுழற்சியும்
ஒவ்வொரு ஆன்மாவும் தன்னுடைய செயலின் விளைவுகளை அனுபவித்து, அதனால் பக்குவநிலை அடையவே மீண்டும் மீண்டும் பூலோகத்தில் பிறப்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆன்மாவும் செயல்களின் நல்ல மற்றும் தீய விளைவுகளை அனுபவித்து தீரவேண்டும் என்பது பிரபஞ்சநியதி. சில ஆன்மாக்கள் வரம்புமீறிய தீயசெயல்களின் விளைவுகளை அனுபவிக்க நரகலோகங்களுக்கும், அளவற்ற நற்செயல்களின் விளைவுகளை அனுபவிக்க சொர்க்கலோகங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
பிறப்பெடுக்கும் ஆன்மாக்கள் செயலின்றி இருத்தல் இயலாது. செயல் புரியும் பொழுது அதன் வெளிப்பாடு நல்வினை - தீவினைகளாக உருவெடுத்துப் பின் ஆகாமி வினையில் சேர்க்கப்படுகிறது. நல்வினைகள் - தீவினைகள் ஆகிய இரண்டுமே பிறவியில் ஆழ்த்தவல்லது. முக்தி நிலையான பிறவாமைக்கு இவ்விரு வினைகளும் தடைக் கற்கள். இவ்விரு வினைகளையும் ஒழித்தலே முக்திக்கான வழியாம்.
வினைகளின் பலனை அனுபவிக்க பிறப்பெடுத்தே தீர வேண்டும். அது நல்வினைக்கு கிடைக்கும் நற்பலனாகவும் இருக்கலாம், தீவினைக்கு கிடைக்கும் தீயபலனாகவும் இருக்கலாம்.
ஒவ்வொரு ஆன்மாவும் ஏற்று வரும் பிராரப்த கர்மாவை (அதாவது இப்பிறவியில் தீர்த்து முடிக்க வேண்டிய கர்மாக்கள்) பிறவிக் காலத்திற்குள் முழுவதும் அனுபவித்து விடுகிறது. எனினும் ஆகாமிய வினைகளும் (அதாவது இப்பிறவியில் ஆன்மாக்களின் நல்வினைகள்-தீவினைகள்) பெரும் அளவு சேர்ந்து முடிவில் சஞ்சித வினையாக மாறுவதால் சஞ்சித வினைக் குவியல் என்றும் தீர்வதில்லை.
சஞ்சித வினைகள் முழுவதுமாக அனுபவித்துத் தீர்க்கப்படும் வரை ஆன்மாக்களுக்கு பிறவி தொடர்ந்து வரும். பிறவிகளுக்குக் காரணம் கர்மா. கர்மாவுக்குக் காரணம் பிறவிகள். பிறவிச் சுழற்சி என்று பகவத் கீதை இதையே குறிக்கிறது. எண்ணற்ற பிறவிகளுக்குப் பின்னரே ஒரு ஆன்மாவுக்கு மானிடப் பிறவி வாய்க்கிறது என்றும் சாத்திரம் அறிவிக்கிறது. ஆயினும், எப்படி கர்மாக்களை எல்லாம் அழித்து பிறவாமை எனும் நிலையை அடைவது?
பகவத் கீதையில் பகவான் அதற்கான வழியை மிகவும் அழகாக எடுத்துரைக்கிறார்.
எல்லோர்க்கும் நன்மை பயக்கும் காரணங்களை உடைய செயல்களையே புரியவேண்டும். அந்த நற்செயல்களின் பலன்களைத் துறந்துவிட வேண்டும். நல்ல காரியங்கள் செய்வது பின்னாளில் எனக்கு நற்பலன்கள் வருவதற்காக என்று கருதாமல், நல்ல காரியங்கள் செய்வது என்னுடைய ஆத்மதிருப்திக்காக என்ற எண்ணத்தை முழுமையாக கொண்டிருக்க வேண்டும்.
செயல்களின் பலன்களை எல்லாம் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட வேண்டும்.
இதனால் நம்முடைய கர்மப் பலன்களை எல்லாம் இறைவனே பொறுப்பேற்றுக் கொள்கிறார். இதனால் தான், கண்ணன் கர்ணனிடம் வந்து கர்ணன் ஆற்றிய நற்தொண்டுகளுக்கான பலன்களை எல்லாம் தானமாக கேட்டான். தான் ஆற்றிய நற்தொண்டுகளின் பலன்களை எல்லாம் கர்ணன் இறைவனுக்கே தானமாக கொடுத்துவிட்டு, கர்மங்கள் எல்லாம் தீர்ந்து முக்திநிலை அடைந்தான்.

BIGG BOSS


BIGG BOSS வரவு செலவு : 👇

விஜய் டிவியில் Bigg Boss நிகழ்ச்சி...

விஜய் டிவியின் வியாபாரம்..

ஸ்டுடியோ செட்டிங் செலவு ₹20 கோடி.

நிகழ்ச்சி ஆங்கர் கமலுக்கு ₹ 20 கோடி.

மற்ற 14 பேருக்கு ₹ 42 கோடி

100 நாள் படப்பிடிப்பு செலவு ₹25 கோடி

முதல் நாள் மற்றும் கடைசி நாள் விழாச் செலவு ₹ 3 கோடி

மொத்த செலவு ₹110 கோடி

இனி வரவு!

விளம்பரம் மட்டும்.

30 வினாடிக்கு ₹ 25 லட்சம்

ஒரு நாளின் மொத்த வியாபார நிமிடங்கள் 25 (x 60 விநாடி = 1500/30 = 50x.25) = ₹12.5 கோடி

100 நாட்களுக்கு வரவு ₹ 1250 கோடி

மொத்த லாபம் =₹ 1140 கோடிகள்

 நிறைய பேருக்கு இந்த நிகழ்ச்சிய பத்தி முழுசா தெரிந்திருக்க வாய்ப்பில்ல !!!

ஹிந்தில பல வருஷமா ஓடிட்டு இருக்குர நிகழ்ச்சி இப்போ தமிழ்நாட்டுக்கு வந்திருக்கு !!!

100 நாள்னு சொன்னாலும் அதோட சூட்டிங்க மிஞ்சி போனா பத்தே நாள்ல முடிச்சிடுவாங்க, அத அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேர கணக்குல பிரிச்சு 100 நாளைக்கு ஒளிபரப்புவாங்க !!!

என்னன்ன நடக்கனும் பேசனும்னு எல்லாமே முன்னடியே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு தான் சூட்டிங் தொடங்குமே !!!

ஒவ்வொருத்தரா மக்கள் ஓட்டு போட்டு வெளியேத்திட்டு இருப்பாங்க , ஆனா உண்மையிலேயே யாரு வெளியேரனும்னு முடிவு பண்ணிதான் அதுக்கு ஏத்த மாதிரி காட்சிகள் அமைக்க பட்டிருக்கும் !!!

நிறைய சண்டைகள் , மோதல்கள், விவாதம், சச்சரவில் தொடங்கி காதல், கள்ளகாதல், பாலியல் தொல்லைகள் உட்பட நடப்பதுபோல் காட்சிகள் அரங்கேறும் !!!

மக்கள் அதை கண்டு கொதித்தெழுந்து தவறு செய்தவனுக்கு எதிராக ஓட்டு அளித்து வெளியேற்றும்படி நடைபெறும் !!!

சிலர் தாங்கலாகவே உள்ளே இருக்க முடியாமல் கோபத்தில் வெளியேருவது போல் வைத்து TRP ஏற்றுவார்கள் !!!

இளைஞர்களை கவர வீட்டினுள் கவர்ச்சியான அரைகுறை ஆடைகளையே அணிந்து வருவார்கள் நடிகைகள் !!!

ஊரெங்கிலும் இதில் நடைபெறும் சம்பவங்களையே பேசுமாறு வைப்பார்கள் !!!

இறுதியில் அவர்கள் முடிவு செய்த படியே ஒருவரை மக்களே தேர்ந்தெடுத்தது போல் பரிசு வழங்கி அடுத்த சீசனுக்கான வேலைகள் தொடங்கி விடும் !!!

இது எல்லாம் தானாக நடப்பதாக நம்பி இதுவரை அக்கம் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என பார்த்து வந்த மக்கள் , இனி இந்த வீட்டில் என்ன நடக்கிறது என பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் , அடுத்த சீசனுக்காக ஏங்கவும் செய்வார்கள் !!!

அடுத்தவர் வீட்டில் நடப்பதை மிகுந்த அக்கறை கொண்டு எட்டி பார்க்கும் நம் மன ஓட்டமே இந்த நிகழ்ச்சியின் உயிர் நாடி !!!

அதை வைத்தே கலாச்சாரத்தை அழித்து காசு பார்க்கும் ஒரு கும்பல் !!!

அதை கிண்டல் செய்கிரேன் என மீம்ஸ் போட்டு மக்களிடையே இன்னும் அதிகமாக பகிர வைக்கும் சில இளைஞர்கள் !!!

முடிந்தால் விழிப்புணர்வு மீம்ஸ் போட்டு மக்களுக்கு புரிய வையுங்கள் !!!

இந்த முறையாவது மீடியா TRP பசிக்கு பலி ஆகாமல் சாமர்த்தியமாக விழித்து கொண்டு... 👍

பேராபத்தில் கோயம்புத்தூர் மக்கள்

*பேராபத்தில் கோயம்புத்தூர் மக்கள் !*
-----------------------------------------------------

*காஞ்சிமாநதியில் உலகிலேயே சுவையான சிறுவாணி நீரை அள்ளி குடித்து வளர்ந்து மக்களே தற்போது உங்களுக்கு குடிதண்ணீரை பிரஞ்சு நாட்டு Suez (சுயஸ்) என்னும் தனியார் கம்பனி வழங்க உள்ளதை அறிவீர்களோ !*

*ஆம், கோயம்புத்தூர் மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை கடந்த பிப்ரவரி மாதம் 3,150 கோடிக்கு பிரஞ்சு நாட்டின் சுயஸ் Suez என்னும் தனியார் நிறுவனத்திற்கு அரசு வழங்கிவிட்டது.*

*ஆதாரம் இதோ :* https://www.suez.com/en/News/Press-Releases/SUEZ-wins-a-contract-worth-near-400-million-euros-to-improve-the-water-distribution-service-in-Coimbatore

*இந்தியாவில் மிகப்பெரிய உரிமத்தை பெற்றுவிட்டோம் என அந்நிறுவனம் தனது Website ல் மார்தட்டி சொல்லி இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.*

*இந்தியாவிலேயே டெல்லி மாளவியா நகருக்கு பிறகு இரண்டாவதாது கோயம்புத்தூரை கண்டுபிடித்து வந்துள்ளது இந்நிறுவனம்.*

*இனி இந்த தனியார் நிறுவனம் கொடுக்கும் நீரைத்தான் கோயம்புத்தூர் மக்கள் குடித்தாக வேண்டும்.*

*தற்போது பொலிவியா Boliva நாட்டில் Cochabamba என்னும் நகரில் நடந்த சம்பவத்தை பார்த்துவிட்டு வருவோம் வாருங்கள்.*

*அந்நாட்டு அரசு தன் மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை முதலில் SEMAPA என்னும் தனியார் கம்பனிக்கும் பின் இதே SUEZ சுயஸ் என்னும் தனியார் கம்பனிக்கு வழங்கியது.*

*கார்டை சொருகினால் தண்ணீர். கொடுக்கும் பணத்திற்கு ஏற்றார் போல் தண்ணீர் கொடுப்பார்கள். பணம் இல்லை என்றால் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது.*

*இப்படி ஆனதால், மக்கள் ஆற்று நீரை பயன்படுத்த துவங்கினார்கள். இதை பொருத்துக்கொள்ள முடியாத தனியார் கம்பனி. ஆற்று வழிப்பாதை அமைப்பதாக கூறி அங்கு தனியார் இரானுவத்தை நிறுத்தி மக்கள் ஆற்றில் நீர் எடுப்பதை தடுத்தார்கள். (இந்நேரம் ஜக்கியின் Rally for River ஐ உங்களுக்கு ஞாபகப்படுத்த விருப்புகிறேன்)*

*சரி ஆற்றில் தான் எடுக்க முடியாது. தன் வீட்டு கிணற்றில், Bore well ல் தண்ணீர் எடுத்து பயன்படுத்தினார்கள். அதையும் தடுத்து அதற்கு கட்டணம் வசூலித்தார்கள்.*

*வெறுத்துப் போன மக்கள், சரி மழை நீரையாவது பயன்படுத்துவோம் என மழை நீரை சேமித்து பயன்படுத்த துவங்கினார்கள். ஆத்திரமடைந்த கம்பனி மழை நீரை பயன்படுத்த கூடாது என்று அதற்கும் சரமாரியாக கட்டணம் வசூலித்து.*

*மழை நீரை கூட விட்டு வைக்கா பாவிகள் என... Even The Rain என்று இச்சம்பவம் ஒரு படமாக உருவானது.*

*வெகுண்டெழுந்த மக்கள் போர் களத்தில் குதித்தனர். உள்நாட்டு போர் வெடித்தது. மக்கள் அனைவரும் ஒன்றினைந்து போராடி அந்நிறுவனத்தை நாட்டை விட்டே அடித்து விரட்டினர்.*

*ஆதாரம் :*  https://en.m.wikipedia.org/wiki/Cochabamba_Water_War

https://nஆதாரம்cla.org/article/bolivia-privatized-water-company-defeated

*இனி சுயஸ் க்கு பணம் கொடுத்தால் தான் குடிக்க தண்ணீர். அவன் வைப்பது தான் கட்டணம். கட்டணம் செலுத்தவில்லை எனில் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்படும்.*

*தண்ணீரை சுத்தம் செய்கிறேன் என்ற பேர்வழியில் என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள் என்பது தெரியாது.*

*மீடியாக்களில் இச்செய்தி திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. இதை பற்றி நாடாளுமன்றத்திலோ, சட்டசபையிலோ, கோவை மாநகராட்சி கூட்டத்திலோ விவாதம் நடந்ததாக எந்த செய்தியும் இல்லை.*

*இந்தப் பிரஞ்சுக் கம்பெனி தகவல் பெறும் சட்டத்தின் கீழ் வராது. யாரும் எந்த கேள்வியும் கேட்க முடியாது.*

*இது கோயம்புத்தூரோடு நின்றுவிடப்போவதில்லை இனி அனைத்து பெரு நகரங்களிலும் தனியார் நிறுவனங்கள் தங்கள் தண்ணீர் தொழிலை தடையின்றி செய்வார்கள்.*

*அதற்காக செயற்கையாக தண்ணீர் தட்டுப்பாடு கூட உருவாக்குவார்கள். கட்டணத்தையும் அவர்களே நிர்ணயம் செய்வார்கள்.*

*குடிக்கும் நீருக்கும், கர்பப்பைக்கும், சிறுநீரகத்திற்கும் குழந்தைப் பேருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதை மரபு மருத்துவர்கள் அறிவார்கள்.*

*நம் கலாச்சாரத்தில் நீருக்கு எந்த அளவு நாம் முக்கியத்துவம் தருகிறோம் என்பதை நீங்களே அறிவீர்கள்.*

*நீரின்றி அமையாது உலகு - வள்ளுவர்*
*தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே - பழமொழி*

*Science - Water has Memory.*

*இன்னும் எத்தனை எத்தனை. நீர் உங்கள் உயிருடன் தொடர்புடைய ஒரு உயிர்ப்பொருள்.*

*நம் தாய் மண்ணில் உருவான சிறுவானி நீரை, இனி உங்கள் நாவில் நினைக்க, நீங்கள் பிரஞ்சு நாட்டு காரனுங்கு கப்பம் கட்ட வேண்டும்.*

*தன் சொந்த நாட்டு மக்களுக்கு குடிநீரை கூட விநியோகிக்க துப்பில்லாத இந்த அரசு தான், நாளை அணு விபத்து ஏற்பட்டால் நம்மை காப்பாற்ற போகிறது.*

*நம்புங்கோள் மக்களே !*

*இது தான் சுதந்திர இந்தியா*
*இது தான் மக்களுக்கான அரசு*

*பணப்பேய் பிடித்த பிணந்தின்னிகள் இந்நாட்டை ஆளும் வரை இது தொடரும்...*

*நன்றி*

*இரா.மதிவாணன்*

🌹🌿🌼🌱🌷🙏🏾🌷🌱🌼🌿🌹

எங்கள் ஆடை சற்று விலகியவுடன் மறைவான பகுதி தெரிகிறதா

தாலி கட்டிய அன்றோ அல்லது மனதால் இணைந்த அந்த நிமிடங்களிலோ அப்படி ஒரு ஆத்மார்த்தமான அரவணைப்பு ஆடைக்கலைப்பு என சுகமாக அரங்கேறும் பல நிகழ்வு...